தொடர்ந்து குறையும் கொரோனா.. ஒரு நாளில் 2093 பேருக்கு பாதிப்பு! ஆனால் மீண்டும் பதிவான உயிரிழப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், இப்போது மாநிலத்தில் வைரஸ் சற்றே குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் ஒமிக்ரான் கொரோனா காரணமா 3ஆம் அலை ஏற்பட்டது. அப்போது ஒரு கட்டத்தில் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கொரோனா பாதிப்பு 30 ஆயிரம் வரை சென்றது.
இதையடுத்து மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. வைரஸ் பாதிப்பு மாநிலத்தில் விரைவில் குறைந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்வு நிலைக்குத் திரும்பினர்.

தினசரி பாதிப்பு
இதையடுத்து பல வாரங்களுக்குத் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. இடையில் கடந்த சில நாட்களாக வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இப்போது மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 34,662 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டத்தில் 2093 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
இதன் மூலம் மாநிலத்தில் உறுதியான கொரோனா பாதிப்பு 35,26,351ஆக அதிகரித்து உள்ளது. இன்று வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஐக்கிய அமீரகத்தில் இருந்து திரும்பியவர் ஆகும். அதேபோல ஆக்டிவ் கேஸ்களும் கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று மாநிலத்தில் 16702 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றைய தினம் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 16504ஆகக் குறைந்து உள்ளது.

ஒருவர் உயிரிழப்பு
அதேபோல இன்று மட்டும் மொத்தம் 2290 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,71,816ஆக உயர்ந்துள்ளது. இன்று கோவையைச் சேர்ந்த ஒருவர் மட்டும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 38,031 பேரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வாரியாக பார்க்கும் போது தலைநகர் சென்னையில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஒரே நாளில் சென்னையில் 516 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 269 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் 178 பேருக்கும் திருவள்ளூரில் 104 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவை தவிர எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டவில்லை. மாநிலத்தில் பாசிட்டிவ் விகிதமும் இப்போது 6.4ஆக உள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications