"சோலார் மின்சாரம்.." சிக்சர் அடிக்கும் தமிழ்நாடு.. வியந்து பார்க்கும் மற்ற மாநிலங்கள்.. புது உச்சம்!
சென்னை: தமிழ்நாட்டில் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரம் என்பது இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் மின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மின் உற்பத்தியை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது.

ஒரு காலத்தில் மின் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக இருந்த தமிழ்நாடு, தொடர்ந்து எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் இப்போது மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது.
சோலார் மின்சாரம்: இதற்கிடையே சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு இப்போது புதிய சாதனையைப் படைத்துள்ளது. தமிழ்நாட்டில் வெப்பம் உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்னவோ உண்மைதான்.. இருப்பினும், இந்த அதீத வெப்பம் காரணமாகத் தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது இப்போது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி தமிழ்நாட்டில் அதிகபட்சமாகச் சூரிய மின்சாரம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 4866 மெகாவாட்டாக ஆக அதிகரித்துள்ளது. இந்தாண்டு சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்தி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு கவனம் செலுத்தி வரும் நிலையில், சோலார் மின்சார உற்பத்தி என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
புதிய உச்சம்: இந்தச் சூழலில் தான் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி மின்சார உற்பத்தி என்பது 4,882 மெகாவாட் என்ற புதிய சாதனையை எட்டியுள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி 4,866 மெகாவாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது அதை முறியடித்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி தமிழ்நாட்டில் சோலர் மின்சார நுகர்வும் 36.10 மில்லியன் யூனிட்டாக அதிகரித்திருந்தது. இது இந்த ஆண்டு இதுவரை இல்லாத அதிகபட்சமாகும்.
கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி மாநிலத்தின் அதிகபட்ச மின் தேவையும் 16,744 மெகாவாட்டாக உச்சம் தொட்டிருந்தது. தமிழ்நாட்டில் இப்போது தினசரி நுகர்வு 355.050 மில்லியன் யூனிட்டாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவும் வரும் காலத்தில் நிச்சயம் அதிகரிக்கவே செய்யும் என்ற சூழலில் அனல் மின் நிலையம் போன்ற அதிக மாசை ஏற்படுத்தும் மின்சாரத்தைத் தவிர்த்து சோலார் மின்சாரம், காற்றாலை மூலம் மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தியில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

மின் உற்பத்தி: தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் காற்றாலை மின்சார உற்பத்தியில் நாம் முன்னணியில் இருக்கிறோம். நாட்டிலேயே குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் தான் அதிகபட்சமாகக் காற்றாலை மூலம் அதிகபட்ச மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனிடையே சோலார் மின் உற்பத்தியையும் அதிகரிக்க நாம் இப்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வீடுகளின் மாடியில் சோலர் பேனல்களை அமைக்கவும் உதவித் தொகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுபோல தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையில் சோலார் மின்சார உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது வரை தமிழ்நாட்டில் மொத்தம் 6,750.62 மெகாவாட் உற்பத்தி செய்யும் அளவுக்கு சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன.. தொடர்ந்து அதிகரிக்கும் மின்சார விலையில் இருந்து தப்பிக்கப் பல பெரு நிறுவனங்கள் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யவே விரும்புகின்றனர்.
தென் மாநிலங்களைப் பொறுத்தவரை இப்போது தமிழ்நாட்டில் தான் மின் உற்பத்தி உச்சத்தில் இருக்கிறது.. கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மின் பயன்பாடு 19,387 மெகாவாட் என்ற புதிய உச்சத்தைப் பதிவு செய்தது.. அந்த நாளில் மட்டும் தமிழ்நாட்டில் 423.785 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
மின் வெட்டு: "திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி": அமைச்சர் நிர்மல்குமார் ஷாக் தகவல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
லோ வோல்டேஜ்.. ஏசி ட்ரிபிள் பூஸ்டரே திணறுது.. ஏசி வாங்கியும் இப்படி ஒரு சிக்கலா? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications