சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மின்னல் வேகம்.. தமிழகத்தில் 9000ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சிறார்கள் மத்தியில் அதிகரிக்கும் வைரஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நேற்று 8,449 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு 9,344ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாகக் கடந்த சில வாரங்களாக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது.

இதன் காரணமாக மாநிலத்தில் பல புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்தது. மேலும், பொது இடங்களில் மாஸ்க்குகளை அணியாமல் சுற்றும் நபர்களிடம் அபராதம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

பிரதமர் மோடி திடீர் ஆலோசனை... சற்று நேரத்தில் தொடங்கும் அவசர கூட்டம்... விரைவில் புதிய அறிவிப்புகள்?பிரதமர் மோடி திடீர் ஆலோசனை... சற்று நேரத்தில் தொடங்கும் அவசர கூட்டம்... விரைவில் புதிய அறிவிப்புகள்?

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இருப்பினும், மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததாகத் தெரியவில்லை. நேற்று 8,449 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு 9,344ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,00,804 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 9,344 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, 12 வயதிற்குட்பட்ட 300 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்

கொரோனா உயிரிழப்புகள்

ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 39 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகச் சென்னையில் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு மற்றும் திருச்சியில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 13,071 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Array

Array

தமிழகம் முழுவதும் நேற்று 61,593 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது 65,635ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தில் 5,263 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,10,77,500 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைநகரில் என்ன நிலை

தலைநகரில் என்ன நிலை

தலைநகர் சென்னையில் அதிகபட்சமாக 2,884 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 1657 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது சென்னையில் 23,625 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 22 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். அதேபோல செங்கல்பட்டில் 807 பேருக்கும் கோவையில் 652 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

English summary
More than 9000 tested positive for Corona including 300 children.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X