'அதிர்ச்சி..' தமிழகத்தில் மீண்டும் உயர தொடங்கிய கொரோனா பாதிப்பு.. உயிரிழப்பும் அதிகரிப்பதால் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாகக் குறைந்த வந்த கொரோனா பாதிப்பு, இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று மாநிலத்தில் மொத்தம் 1,697 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை காரணமாகக் கடந்த மே மாதம் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பின்னரே ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

தற்போது அக்டோபர் 31ஆம் தேதி வரை மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் தளர்வுகள் காரணமாக எங்கு வைரஸ் பாதிப்பு அதிகரிக்குமோ என அஞ்சப்பட்டது. இருப்பினும், நிலைமை பெரியளவில் கையை மீறிச் செல்லவில்லை.

தினசரி கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனா பாதிப்பு

கடந்த 2 நாட்களாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று தமிழகத்தில் மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 1,56,850 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கர்நாடகாவில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட மொத்தம் 1,697 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 26,45,380 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தின் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 1.1 ஆகவே நீட்டிக்கிறது. அதிகபட்சமாகத் தஞ்சையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 2.1 ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் மாநில சராசரியைவிடக் குறைவாக 0.9%ஆக உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்

கொரோனா உயிரிழப்புகள்

நேற்றைக் காட்டிலும் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. நேற்று 22 பேர் மட்டுமே கொரோனாவால் பலியாகியிருந்த நிலையில்,இன்று சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 27 உயிரிழந்துள்ளனர். அவர்களில் 24 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இன்று உயிரிழந்தவர்களில் ஒருவர் எவ்வித இணை நோயும் இல்லாத 4 பேரும் 50 வயதுக்குக் குறைவான 4 பேரும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகக் கோவையில் 4 பேரும் தஞ்சை, சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா மூன்று பேரும் பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 35,337 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மாநிலம் முழுவதும் 16,893ஆகப் பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 16,969ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,594 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், இதுவரை தமிழ்நாட்டில் 25,93,074 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வரியான கொரோனா பாதிப்பில் இன்று சென்னையில் தான் மோசமாக உள்ளது. தலைநகர் சென்னையில் இன்று மொத்தம் 232 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் 215 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டில் 114 பேருக்கும், ஈரோட்டில் 131 பேருக்கும் தஞ்சையில் 103 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களில் மட்டுமே இன்று வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+