தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பிறகு குறைந்த தினசரி வைரஸ் பாதிப்பு.. 26 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1957 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் மாநிலத்தில் 28 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், தலைநகர் சென்னையில் நேற்றுடன் ஒப்பிடுகையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதலே கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து 68 நாட்களாக வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது.
ஆனால், நேற்று வரை கடந்த 4 நாட்களாக வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் சுதாரித்துக் கொண்டு தமிழ்நாடு அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகள் அறிவித்தது.

தினசரி கொரோனா பாதிப்பு
அதைத் தொடர்ந்து இன்று மாநிலத்தில் மீண்டும் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. நேற்று 1990 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று சற்றே குறைந்து 1957 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஐந்து பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள், 109 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆகும். இன்று மாநிலத்தில் 1.45 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு. இதுவரை தமிழ்நாட்டில் 25,63,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 28 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 23 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களாகும். மேலும் இன்று உயிரிழந்தவர்களில் 6 பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள் மற்றும் 7 பேர் எவ்வித இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 28 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 23 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களாகும். மேலும் இன்று உயிரிழந்தவர்களில் 6 பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள் மற்றும் 7 பேர் எவ்வித இணை நோயும் இல்லாதவர்கள். தமிழ்நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 34,130 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.இணை நோயும் இல்லாதவர்கள். தமிழ்நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 34,130 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
தமிழ்நாட்டில் நேற்று 20,524ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் இன்று 20,385ஆகக் குறைந்துள்ளது. அதேபோல இன்று மட்டும் 2,068 கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 25,09,029 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டத்தில்பாசிட்டிவ் விகிதம் 3.2% ஆக உள்ளது. அதேபோல அரியலூர் (2.2%), கோவை (2.1%), ஈரோடு (2.1%) மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 2% மேல் உள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.3% ஆக உள்ளது.

மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு
மாவட்ட வாரியனா பாதிப்பில் கோவை தான் டாப்பில் உள்ளது. நேற்று கோவையில் 210 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 219 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தலைநகர் சென்னை(189), ஈரோடு (168), செங்கல்பட்டு (127), தஞ்சை (123) ஆகிய மாவட்டங்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் உள்ளது.

14 மாவட்டங்களில் உயரும் கொரோனா
நேற்றைய வைரஸ் பாதிப்புடன் ஒப்பிடுகையில் இன்று 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாகத் திருப்பூரில் 5 பேரும், சேலத்தில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் கோவை, ஈரோடு உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications