'ஷாக்..'தமிழகத்தில் மீண்டும் 17,000ஐ கடந்த ஆக்டிவ் கேஸ்கள்..இந்த 5 மாவட்டங்களில் நிலைமை சற்று மோசம்
சென்னை: தமிழ்நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், இன்றைய தினசரி கொரோனா பாதிப்பும் 1682ஆகப் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை உச்சம் தொட்டது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு 30 ஆயிரம் வரைகூட சென்றது. மாநிலத்திலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பத் தொடங்கின.
இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கிற்குப் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மெல்லக் கட்டுக்குள் வரத் தொடங்கியது. தற்போது தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,51,802 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் மொத்தம் 1,682 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 90 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆகும். தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 26,50,370 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.1 என்றே நீட்டிக்கிறது. அதிகபட்சமாகக் கோவையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 2.0% ஆக உள்ளது. மற்ற எந்த மாவட்டத்திலும் பாசிட்டிவ் விகிதம் 2ஐ தாண்டவில்லை. அதேபோல தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் மாநில சராசரியைவிடக் குறைவாக 1%ஆகத் தொடர்கிறது.

கொரோனா உயிரிழப்புகள்
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 15 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். இன்று உயிரிழந்தவர்களில் ஒருவர் எவ்வித இணை நோயும் இல்லாத ஒருவரும் 50 வயதுக்குக் குறைவான 4 பேரும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகச் செங்கல்பட்டு, சென்னை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
கொரோனாவால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை மீண்டும் தற்போது 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று மாநிலத்தில் 16,993ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள், இன்று 17,027ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,627 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், இதுவரை தமிழ்நாட்டில் 25,97,943 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வரியான கொரோனா பாதிப்பில் இன்று கோவையில் தான் மோசமாக உள்ளது. கோவையில் இன்று மொத்தம் 235 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் 194 பேருக்கும் செங்கல்பட்டில் 110 பேருக்கும் ஈரோட்டில் 130 பேருக்கும் திருப்பூரில் 101 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களில் மட்டுமே இன்று வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications