குட் நியூஸ்..! ஒரு மாதமாக தொடர்ந்து குறையும் கொரோனா.. இந்த 12 மாவட்டங்களில் 100 கீழ் வைரஸ் பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 31ஆவது நாளாக இன்றும் குறைந்துள்ள நிலையில், இன்று மாநிலத்தில் 7427 பேருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களும் 61 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே கொரோனா 2ஆம் அலை ஏற்படத் தொடங்கியது. அதிலும் கடந்த மே மாதம் 2ஆம் அலை உச்சத்தைத் தொட்டிருந்தது.
இதையடுத்து கொரோனா பரல் கட்டுக்கடங்காமல் செல்வதைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னரே தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறையத் தொடங்கியது.

தினசரி கொரோனா பாதிப்பு
சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜூன் 18ஆம் தேதி மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்குக் கீழ் சென்றது. தொடர்ந்து இன்றும் மாநிலத்தில் 31ஆவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று மாநிலத்தில் 1,70,923 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய மூவர் உட்பட 7427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 24,29,924 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்பு
அதேபோல இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 276 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களாகும். கொரோனா உயிரிழப்பும் 3ஆம் நாளாக இன்றும் 200க்கு கீழ் பதிவாகியுள்ளது. இன்று மாநிலத்தில் 189 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அவர்களில் 107 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 82 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். இன்று உயிரிழந்தவர்களில் 38 பேர் இணை நோய் இல்லாதவர்கள், 34 பேர் 50 வயதுக்குட்பட்டவர்கள். தமிழ்நாட்டில் இன்று வரை 31,386 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல ஆக்டிவ் கேஸ்களும் மாநிலத்தில் தொடர்ந்து குறைகிறது. கடந்த வாரம் ஒரு லட்சமாக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 61,329 பேர் மட்டுமே கொரோனா பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்றுவந்த 15,281 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது வரை 23,37,209 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கோவை & ஈரோடு
கடந்த வாரம் வரை கோவை மற்றும் ஈரோட்டில் தினசரி பாதிப்பை 1000க்கும் மேலாக இருந்த நிலையில், தற்போது எல்லா மாவட்டங்களிலும் தினசரி பாதிப்பு ஆயிரத்திற்குக் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகக் கோவையில் 891 பேருக்கும் ஈரோட்டில் 795 பேருக்கும் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல சேலத்தில் 511 பேருக்கும் திருப்பூரில் 458 பேருக்கும் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

12 மாவட்டங்கள்
தலைநகர் சென்னை 4ஆம் நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது. இன்று சென்னையில் 439 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரியலூர், திண்டுக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகிய 12 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100க்கும் கீழாகக் குறைந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications