வழக்கமா பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு திருக்குறளாவது கிடைக்கும்.. இந்த முறை அதுவும் இல்லை.. ஜோதிமணி
2023-2024ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் தமிழகத்திற்கு ஒரு திருக்குறள் கூட கிடைக்கவில்லை- ஜோதிமணி
சென்னை: 2023 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில் தமிழகத்திற்கு ஒரு திருக்குறள் கூட கிடைக்கவில்லை என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
2023- 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் 5-ஆவது பட்ஜெட் இது. அது போல் இந்த ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட்டும் இதுதான். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது.
வருமான வரி செலுத்துவதற்கான ஆண்டு வருமானம் 5 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்த்தியது. விவசாயக் கடனை 20 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தியது. சிகரெட் மீதான வரியை உயர்த்தியது.

தங்கம், வெள்ளி
தங்கம் வெள்ளி, பிளாட்டினம் போன்ற பொருட்களின் வரி உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இது வரவேற்பையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த பட்ஜெட் வழக்கம் போல் தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

மதுரை எய்ம்ஸ்
இதுகுறித்து அவர் அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார். பொதுவாக பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தங்களின் உரைகளில் தமிழ் குறித்தும் திருக்குறள் குறித்தும் பழம்பெரும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் மேற்கோள்காட்டி பேசுவது வழக்கமான ஒன்று.

ஜோதிமணி ட்வீட்
ஆனால் தமிழகத்தில் பிறந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறளை மேற்கோள்காட்டாமல் தனது உரையை முடித்துவிட்டார். இதுகுறித்து காற்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கையில் வழக்கமாக மோடி அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு ஒரு திருக்குறளாவது கிடைக்கும். இந்த முறை அதுவுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ப சிதம்பரம் விமர்சனம்
மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில் பட்ஜெட்டில் ஏழ்மை, வேலையின்மை, சமத்துவமின்மை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிடவில்லை. வேலையின்மை பற்றி ஒரு முறை கூட அவர் குறிப்பிடவில்லை. பரிதாபப்பட்டு, ஏழை என்ற வார்த்தையை அவர் தனது உரையில் இரு முறை கூறினார். அரசு யாரை பற்றி கவலைப்படுகிறது, யாரை பற்றி கவலைப்படவில்லை என்பதை மக்கள் நிச்சயம் அறிவர். புதிய வரி முறையை புகுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதை சிலர் மட்டுமே பல காரணங்களுக்காக தேர்வு செய்கிறார்கள். புதிய வரி முறை சாதாரண வரி செலுத்துவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பழைய வரி முறைதான் பலனளிக்கும் என ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கமல்ஹாசன் விமர்சனம்
அது போல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில் கோடிக்கணக்கான மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்த அல்லாடும் சூழலில் இந்தியப் பொருளாதாரம் பிரகாசிக்கிறது என்ற வெற்றுப் பெருமையுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்டில் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்த நேரடிப் பயன் தரும் திட்டங்கள் இல்லை. நடுத்தர வர்க்கத்திற்கான சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருவாய் இழப்பால் தவிக்கும் மிடில்க்ளாஸ் மக்களுக்கு இந்த வரிச்சலுகையால் பெரிய பலன் இருக்கப்போவதில்லை.
கிராமப் பொருளியலை மேம்படுத்த, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அறிவிப்புகள் ஏதும் இல்லை. சேமிப்பிற்குப் பதிலாக, செலவை ஊக்குவிக்கும் திட்டங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உற்சாகமளிக்கும் அறிவிப்புகளும்தான் பட்ஜெட்டில் பளிச்சிடுகின்றன. வடக்கிற்குச் செழிப்பான, தமிழ்நாட்டிற்குப் பெரிய அறிவிப்புகளோ நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத, ஏமாற்றங்கள் மிகுந்த பட்ஜெட்தான் இது என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications