சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வைரஸ்... தமிழகம் முழுவதும் மாவட்ட வாரிய கண்காணிப்பில் உள்ளவர்கள் விவரம்.. இதோ முழு லிஸ்ட!

Google Oneindia Tamil News

சென்னை : கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 15298 பேரை தமிழக அரசு தனிமைப்படுத்தி வைத்துள்ளது.

Recommended Video

    வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இதுவரை 700க்கும் மேற்பட்டோருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த தமிழகம் முழுவதும் வெளிநாடுகளில் இருந்து மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 15298 பேர் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

    இவர்கள் அனைவரும் தங்களை 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட வாரியாக எத்தனை பேர் என்பது குறித்த மார்ச் 24ம்தேதி விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரங்களை இப்போது பார்க்கலாம்

    குமரி 2வது இடம்

    குமரி 2வது இடம்

    தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 4844 பேர் கண்காணிப்பில் உள்ளார்கள். இதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 1016 பேர் கண்காணிப்பில் உள்ளார்கள். மூன்றாவது மாவட்டமாக தஞ்சாவூர் உள்ளது. இங்கு 844 பேர் கண்காணிப்பில் உள்ளார்கள். 4வது இடத்தில் கோவை உள்ளது. கோவையில் 739 பேர் கண்காணிப்பில் உள்ளார்கள்.

    மதுரையில் 385 பேர்

    மதுரையில் 385 பேர்

    கடலூரில் 624 பேரும், திருச்சியில் 598 பேரும், புதுக்கோட்டையில் 539 பேரும், சிவகங்ககையில் 498 பேரும், நெல்லையில் 473 பேரும் திருவாரூரில் 414 பேரும், ராமநாதபுரத்தில் 392 பேரும், நாகையில் 391 பேரும், மதுரையில் 385 பேரும், சேலத்தில் 366 பேரும், வேலூரில் 339 பேரும் சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்கள்.

     தூத்துக்குடியில் 231 பேர்

    தூத்துக்குடியில் 231 பேர்

    சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 304 பேரும், விழுப்புரத்தில் 249 பேரும், தூத்துக்குடியில் 231 பேரும், காஞ்சிபுரத்தில் 223 பேரும், பெரம்பலூரில் 195 பேரும், திருவண்ணாமலையில் 178 பேரும், திருவள்ளூரில் 171 பேரும், விருதுநகரில் 171 பேரும், அரியலூரில் 169 பேரும், ஈரோட்டில் 131 பேரும் நாமக்கல்லில் 121 பேரும், நீலகிரியில் 119 பேரும், சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் உள்ளார்கள்.

    திண்டுக்கல் 115 பேர்

    திண்டுக்கல் 115 பேர்

    திண்டுக்கல்லில் 115 பேரும், திருப்பூரில் 110 பேரும், கிருஷ்ணகிரியில் 106 பேரும், தேனியில் 88 பேரும், கரூரில் 64 பேரும், தருமபுரியில் 48 பேரும், தென்காசியில் 27 பேரும், கள்ளக்குறிச்சியில் 6 பேரும், திருப்பத்தூரில் 6 பேரும், ராணிப்பேட்டையில் 4 பேரும் தீவிர கண்காணிப்பில் உள்ளார்கள். சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் உள்ள இவர்களின் பெயர், ஊர், தெரு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் போலீசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேற்கண்ட 15298 பேரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு முத்திரையும் குத்தப்பட்டுள்ளது. இவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை பாயும் என அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.

    English summary
    coronavirus prevention: tamilnadu district wise complite list of coronavirus Observation persons
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X