சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை தொடர்ந்து முதலிடம்.. தேனியில் திடீர் அதிகரிப்பு.. மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 738ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 48 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 48 பேரில் 48 பேர், வெளிமாநிலத்திற்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

சென்னையில் 156 பேருக்கு கொரோனா நோய் தோற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 7 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதியானதன் மூலம் இந்த எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது.

Tamilnadu district wise coronavirus patients list is out

தேனியை பொருத்தளவில் ஒரே நாளில் 16 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு 39 என்ற எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டோர் அதிகரித்துள்ளனர்.

கோவை 60, திண்டுக்கல் 46, நெல்லை 40, ஈரோடு 32, திருச்சி 36, நாமக்கல் 33, ராணிப்பேட்டை 27, செங்கல்பட்டு மற்றும் மதுரை 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரூர் 23, தேனி 39, தூத்துக்குடி 17, விழுப்புரம் 20, திருப்பூர் 22, கடலூர், சேலம், திருவள்ளூர் தலா 13, திருவாரூர் 12, விருதுநகர், தஞ்சை, நாகை, திருப்பத்தூர் தலா 11, திருவண்ணாமலை 9, கன்னியாகுமரி 6, காஞ்சீபுரம் 6, சிவகங்கை 5, வேலூர் 6, நீலகிரி 4, தென்காசி 2, கள்ளக்குறிச்சி 2, ராமநாதபுரம், 2, அரியலூர் மற்றும் பெரம்பலூர் தலா 1 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழகத்தில் தற்போது 738 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Chennai remains first place in terms of coronavirus affected people district became new hotspot for coronavirus here is the Tamilnadu district wise numbers of the patients
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X