சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீட்டிலேயே கொரோனா டெஸ்ட் செய்ய வேண்டாம்.. அமைச்சர் மா.சு முக்கிய அட்வைஸ்.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: சோதனை கருவிகளை பயன்படுத்தி வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்வது பாதுகாப்பானது இல்லை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. ஓமிக்ரான் கேஸ்களால் தமிழ்நாட்டில் மூன்றாம் அலை பரவல் ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா கேஸ்கள் 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 30,744 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதனால் 1 லட்சத்திற்கும் கீழ் இருந்த கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து 2 லட்சத்தை நெருங்கி உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 1,94,697 பேர் ஆக்டிவ் கொரோனா நோயாளிகளாக உள்ளனர்.

வாடகைத் தாய் விவகாரம்- ரெடிமேட் குழந்தைகள் என விமர்சனம்- தஸ்லிமா நஸ்ரினுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்புவாடகைத் தாய் விவகாரம்- ரெடிமேட் குழந்தைகள் என விமர்சனம்- தஸ்லிமா நஸ்ரினுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு

கொரோனா

கொரோனா

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுக்க கொரோனா கேஸ்கள் இப்படி உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் பலர் வீடுகளிலேயே கொரோனா டெஸ்ட் எடுக்கும் போக்கு அதிகரித்துள்ளது. நிறைய கொரோனா சோதனை கிட்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் மக்கள் எளிதாக வீட்டிலேயே இன்ஸ்டன்ட் கொரோனா சோதனைகளை செய்து கொள்ள முடியும். சில சோதனை கருவிகளுக்கு ஐசிஎம்ஆரும் அனுமதி அளித்துள்ளது.

ஐசிஎம்ஆர்

ஐசிஎம்ஆர்

இந்த நிலையில்தான் சில சோதனை கருவிகள் தப்பான முடிவை காட்டுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாசிட்டிவ் என்ற முடிவுகள் வரும் போது பிரச்சனை இல்லை. ஆனால் சிலருக்கு பொய்யான நெகட்டிவ் ரிசல்ட் வருகிறது. அதாவது கொரோனா இருந்தாலும் பொய்யாக நெகட்டிவ் என்ற ரிசல்ட் வருகிறது. இதனால் மக்கள் குழப்பம் அடைகிறார்கள். வீட்டில் டெஸ்ட் கிட்டில் நெகட்டிவ் என்று வந்து பின்னர் மருத்துவமனைக்கு சென்று சோதித்தால் பாசிட்டிவ் என்று வருகிறது.

ரிஸ்க்

ரிஸ்க்

இதனால் மக்களின் உடல்நிலை பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனாலும் மக்கள் பலர் டெஸ்ட் சென்டருக்கு செல்ல அச்சப்பட்டுக்கொண்டு வீட்டிலேயே டெஸ்ட் எடுக்கும் போக்கு அதிகரித்துள்ளது. மைல்ட் கொரோனா கேஸ்களை சமயங்களில் இதில் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாட்டில் வேக்சின் விநியோகம் வேகமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு வேக்சின்

தமிழ்நாடு வேக்சின்

பூஸ்டர் டோஸ் விநியோகமும், 15 வயதுக்கு மேற்பட்டோருக்கான வேக்சின் விநியோகமும் வேகமாக நடந்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 9,18,12,456 டோஸ்கள் வேக்சின் போடப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் 2,06,140 பேருக்கு போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 5,39,58,677 பேர் ஒரு டோஸ் வேக்சின்போட்டுள்ளனர். 3,76,47,639 பேர் இரண்டு டோஸ் வேக்சின் போட்டுள்ளனர்.

தமிழ்நாடு கொரோனா சோதனை

தமிழ்நாடு கொரோனா சோதனை

வீட்டில் கொரோனா பரிசோதனை தவறு. தனியார் கடைகளில் விற்கப்படும் கொரோனா பரிசோதனை கருவிகளை சிலர் பயன்படுத்துகிறார்கள்.. அதேபோல் சிலர் ஆன்லைனில் சோதனை கருவிகளை வாங்கி பயன்படுத்திகிறார்கள். இதில் பாதுகாப்பு இல்லை. சோதனை கருவிகளை வீட்டில் பயன்படுத்தாமல் டெஸ்ட் செண்டர்களுக்கு சென்று சோதனை செய்ய வேண்டும். ஐசிஎம்ஆர் அறிவுரைப்படி ஆர்டிபிசிஆர் சோதனை செய்ய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

English summary
Tamilnadu: Do not test in the home with kits as it is not safe says Health Minister Ma Subramaniyan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X