மிரட்டல்.. பள்ளிக்கு உள்ளே சிறைபிடிக்க முயற்சி.. கலெக்டரிடம் புகார் தந்த சிவசேனாதிபதி.. பரபர பேட்டி
சென்னை: தன்னை தொண்டாமுத்தூர் பள்ளிக்கு உள்ளேயே வைத்து அதிமுகவினர் சிறைபிடிக்க முயன்றதாக திமுக வேட்பாளர் சிவசேனாதிபதி குற்றஞ்சாட்டி உள்ளார்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக அமைச்சர் வேலுமணியை எதிர்த்து திமுக சார்பாக கார்த்திகேய சிவசேனாதிபதி போட்டியிடுகிறார். இந்த நிலையில் இன்று வாக்குபதிவின் போது சிவசேனாதிபதி அதிமுகவினரால் தாக்கப்பட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.
செல்வபுரம் பள்ளியில் உள்ள வாக்குசாவடியை பார்வையிடும் போது அங்கு கார்த்திகேய சிவசேனாதிபதி காரை மறைத்து அதிமுக - பாஜகவினர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்த தாக்குதலை எதிர்த்து தொண்டாமுத்தூர் பகுதியில் திமுகவினர் போராடி வருகிறார்கள்.
காரை சுற்றி நின்று தாக்கினார்கள்.. அதிமுக மீது சிவசேனாதிபதி கடும் புகார்.. தொண்டாமுத்தூரில் பரபரப்பு

பேட்டி
இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து சிவசேனாதிபதி பேட்டி அளித்தார்.அதில், கோவையில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். முக்கியமாக பெண்கள், முதியவர்கள் ஆர்வமாக வாக்களிக்கிறார்; மக்கள் கூட்டம் கூட்டமாக வருவது மாற்றத்திற்கான அறிகுறியாக தெரிகிறது.

தோல்வி
அதிமுகவின் தோல்வி உறுதியாகிவிட்டது. இதனால் அவர்கள் வன்முறையில் இறங்கி உள்ளனர். என்னை செல்வபுரம் பள்ளியில் வைத்து சிறைபிடிக்க முயன்றனர். திமுகவின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல், என் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். எனக்கு போலீசாருக்கு முன்பாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

எனக்கு கொலை
கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொண்டாமுத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். அங்கிருக்கும் போலீசாரும் அதிமுகவினரை தட்டிக்கேட்காமல் அமைதி காத்தனர். அதிமுகவினரை அராஜகத்தை தேர்தல் அலுவலர் தட்டிக்கேட்கவில்லை.

கலெக்டர்
இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளேன். அராஜகத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீதும், இதில் நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீதும் புகார் அளித்துள்ளேன் என்று கார்த்திகேய சிவசேனாதிபதி கூறியுள்ளார்.