நீலாங்கரை டூ மாங்காடு.. வளசரவாக்கம் வரை நீளுதே.. விசுக் விசுக்குனு போகும் கரண்ட்.. புழுங்கும் சென்னை
சென்னை: தமிழகத்தில் மறுபடியும் மின்வெட்டு பிரச்சனை ஆரம்பமாகிவிட்டதே என்ற முணுமுணுப்புகள் வெடித்து கிளம்பி உள்ளன.. அதிலும் சென்னைவாசிகள் தினமும் இந்த மின்தடையால் நொந்து போயிருக்கிறார்களாம்.
சென்னை, புறநகர் பகுதிகளில் சில நாட்களாகவே மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. கோடை காலத்தில், குடியிருப்பு, அலுவலகம், தொழிற்சாலைகளில், அதிகளவில் மின் தேவை ஏற்பட்டுள்ளது

என்ன காரணம்: பல இடங்களில் மின்மாற்றியின் திறனை மேம்படுத்தாமல் இருப்பதாலும், மின்வெட்டு பிரச்னை அதிகரித்து வருகிறது. முந்தைய காலம்போல், மீண்டும் மின்வெட்டு ஆரம்பமாகி உள்ளது, திமுக அரசு மீதான விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகிறது.. குறிப்பாக, எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கிளப்பி வருகின்றன.
அடிக்கடி மின்வெட்டு: "மின் வெட்டினால் திமுக ஆட்சியே பறிபோனது என்பதையெல்லாம் முதலமைச்சர் நன்கு அறிவார்.. அதனால், முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு மின்வெட்டுப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், தேவையான நிலக்கரியை விரைந்து பெற வேண்டும்" என்று ஓபிஎஸ்ஸும் வலியுறுத்தி வருகிறார்..
ஆனால், மின்வாரிய ஊழியர்கள் தரப்பில், இந்த மின்வெட்டுக்கு சில காரணம் சொல்லப்படுகிறது. "இரவு 10:00 மணிக்கு மேல், ஒரே நேரத்தில் ஏசி, ஃபேன் உள்ளிட்டவை அதிகம் பயன்படுத்துவதால், மின்மாற்றியில் சுமை தாங்காமல் பழுது ஏற்படுகிறதாம்.. இதனால், இரவு நேரத்தில் 100 கே.வி., திறன் உடைய மின்மாற்றியில், ஒரே நேரத்தில் 370 கே.வி.,க்கு மேல் மின்சாரம் பயன்பாடு அதிகரிக்கும்போது, மின்மாற்றி வெடிக்கிறது.. இதனால், பழுதான மின்மாற்றியை மாற்றவும், சில இடங்களில் மின் மாற்றியின் திறனை அதிகரிக்கவும் பணிகள் நடந்து வருகின்றன என்கிறார்கள்.
முற்றுகை: இப்போது விஷயம் என்னவென்றால், மின்தடை காரணமாக, பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடவும் ஆரம்பித்துவிட்டனர்.. இன்னும் ஒருபடிமேலேபோய், மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு, பாயை விரித்து படுத்து போராட்டங்களையும் கையில் எடுத்து வருகிறார்கள்.

சென்னை திருவொற்றியூர், அடையாறு பகுதிகளில் கேபிள் பழுது காரணமாக, நேற்று முன்தினமும் முதல் காலை வரை, மின் தடை நீடித்திருக்கிறது.. இரவு நேரத்தில் மின் தடை ஏற்படுவதால், புழுக்கத்தில் துாங்க முடியாமல் குழந்தைகளும், பெரியவர்களும் அவதிப்படுகிறார்களாம்..
ஆலந்தூர்: ஆலந்தூரிலும் இப்படித்தான், பல பகுதிகளில் கடந்த 20 நாட்களாகவே, மின்தடை ஏற்பட்டிருக்கிறது. இந்த மின் தடையை சரி செய்ய கோரி, அதிமுகவின் மாஜி அமைச்சர் வளர்மதி தலைமையில் பொதுமக்களும் நேரடியாகவே சென்று கோரிக்கை மனுவை தந்துள்ளனர்.. அப்படியிருந்தும், அன்றைய தினம் இரவு மீண்டும் மின் தடை ஏற்பட்டுவிட்டது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர், ஆலந்துார் எம்கேஎன் சாலையிலுள்ள மின் வாரிய அலுவலகம் எதிரில், பாய்களை விரித்து அமர்ந்து, மறியலில் ஈடுபட்டுவிட்டார்கள். ராமாபுரத்தில் சில நாட்களாக, இரவு ஏற்படும் திடீர் மின்வெட்டு, நள்ளிரவு வரை நீடித்து வருகிறது.. வளசரவாக்கம், நெற்குன்றம், போரூர், எம்ஜிஆர் நகர், கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், திடீர் மின் வெட்டு தொடர்கிறது.
குரோம்பேட்டை: அண்ணா நகர் மண்டலத்தில், வில்லிவாக்கத்தின் சில இடங்களிலும் நைட் நேரங்களில் மின் தடை ஏற்படுகிறது. குரோம்பேட்டை, அடையாறு, தரமணி, கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர் பகுதியில், அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு, இரவில் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை நீடிப்பதாக அந்தந்த பகுதி மக்கள் வேதனையுடன் சொல்கிறார்கள்.
இதேபோல, சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம், நீலாங்கரை, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியிலும் மின்தடை ஏற்பட்டுள்ளது.. செங்குன்றத்திற்கு 50 ஆயிரம் கி.வோ.மின்சாரம் தற்சமயம் தேவை என்ற நிலையில், 32 ஆயிரம் கி.வோ., மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது.. மின்தடை ஏற்பட இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.. தொழில்நுட்பக் கோளாறு ஒருபக்கம், மின்பகிர்மான கருவிகளில் ஏற்படும் பிரச்சனை மறுபக்கம் என மாறி மாறி கரண்ட் போய் கொண்டே இருக்கிறது.
சிட்லபாக்கம்: அதுமட்டுமல்ல, சிட்லப்பாக்கம், செம்பாக்கம், அஸ்தினாபுரம் பகுதிகளிலும், குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி பகுதிகளிலும், தினமும் 2 வேளையாவது, 2 மணி நேரம் கரண்ட் போய்விடுகிறதாம். இதையெல்லாம் அதிகாரிகள் விரைந்து சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும், முழக்கங்களும் சென்னைவாசிகளிடமிருந்து கிளம்பி உள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications