Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசு திரைப்பட விருது சர்ச்சை.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. சினிமா, சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிப் பேசினார். அப்போது, தமிழக அரசின் விருது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துப் பேசியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், சினிமா, சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தார். 2016 முதல் 2022 வரையிலான திரைப்பட விருதுகளும், 2014 முதல் 2022 வரையிலான சின்னத்திரை விருதுகளும், 2015-16 முதல் 2021-22 வரையிலான மாணவர் விருதுகளும் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

Tamilnadu film award

சிறந்த திரைப்படம், நடிகர்கள்

சிறந்த நடிகர்களாக தனுஷ், பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு, விஜய்சேதுபதி, கார்த்தி ஆகியோரும், சிறந்த நடிகைகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய்பல்லவி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட திரைப்படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

உதயநிதி ஸ்டாலின் உரை

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருது வழங்கிப் பேசியதாவது: நல்ல கலைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற ஒரே நோக்கில் இந்த நிகழ்சி நடத்தப்படுகிறது. அண்ணா கலைஞர் இருவரும் கலைத் துறையில் எவ்வளவோ சாதித்துள்ளனர். தமிழ் சினிமாவின் போக்கை அண்ணாவும், கலைஞரும் மாற்றியுள்ளனர். இந்தியாவுக்கே தமிழ் சினிமாதான் டிரெண்ட் செட்டராக உள்ளது..

கலைத் துறை சார்ந்த நிகழ்ச்சிகளிலும் கடந்த மூன்று, நான்கு வருடங்களாக நான் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியை என்னால் தவிர்க்க முடியவில்லை. ஏனென்றால் நான் நிச்சயம் உங்களில் இருந்து உருவாகி வந்தவன் தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு வகுப்பறைக்கு வந்த உணர்வை இந்த நிகழ்ச்சி தந்திருக்கிறது.

விருது தொடர்பான விமர்சனங்கள்

அந்த உரிமையோடும், பெருமையோடும் உங்களைச் சந்திப்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கிறேன். இந்த விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டவுடனேயே நிறைய விமர்சனங்கள் வந்தன. அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் சொல்லக்கூடிய ஒரே பதில், பல ஆண்டுகளாக இந்த விருதுகள் அறிவிக்கப்படாமல், வழங்கப்படாமல் இருந்து வந்தது.

நம்முடைய முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்னர் இந்த விருதுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அறிவித்தார். இதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் கேபிகே வாசுகி தலைமையில் ஒரு தேர்வுக் குழுவையும் முதலமைச்சர் அறிவித்தார். அந்த தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தான் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றது.

உரிய அங்கீகாரம்

முழுக்க முழுக்க கிரெடிட் அடிப்படையில் தான் இந்த விருதுகள் உங்களுக்கு கிடைத்துள்ளது. கலைத் துறையில் இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் தெரியும். விருது என்று அறிவித்தவுடனேயே எல்லோருக்கும் விருதுகளை கொடுக்க முடியாது. விருது பெற்றவர்கள் தமிழ் கலைத் துறைக்கு எவ்வளவு பெருமைகளை தேடித் தந்து கொண்டிருக்கிறீர்கள்.

அதே அளவுக்கு மற்றவர்களும் தமிழ்நாட்டுக்கு பெருமைகளைத் தேடித் தந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் உரிய நேரத்தில் அங்கீகாரம் அளிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+