சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

TN Gov: பேரூராட்சிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு.. யாருக்கு எத்தனை இடங்கள்.. வெளியான அரசாணை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சிக்கான இட ஒதுக்கீடு விவரம் வெளியாகியுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சிக்கான இட ஒதுக்கீடு விவரம் வெளியாகியுள்ளது.. ஆதி திராவிடர்களுக்கு 85, பழங்குடியினருக்கு 3 பொதுப் பிரிவு பெண்களுக்கு 200 பேரூராட்சிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணையை வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாநகராட்சிகள் உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 649 பேரூராட்சிகள் இருக்கின்றன..

ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்த நிலையில், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் நடக்க போகிறது..

 மிக விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்? அரசியல் கட்சிகளுடன் ஜன. 19-ல் தேர்தல் ஆணையம் ஆலோசனை மிக விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்? அரசியல் கட்சிகளுடன் ஜன. 19-ல் தேர்தல் ஆணையம் ஆலோசனை

 தமிழக அரசு

தமிழக அரசு

ஆனால், இதற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் உள்ள நிலையில், மாநகராட்சிகளுக்கு வார்டு வரையறை செய்வது தொடர்பான இறுதிக்கட்ட பணிகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன.. அந்த வகையில் மேயர் பதவிகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் பிரிக்கப்பட்டு, 11 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னை, தாம்பரம் மாநகராட்சி, மேயர் பதவிகள் பட்டியல் சமூக பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேரூராட்சி

பேரூராட்சி

ஆவடி, கடலூர், திண்டுக்கல், கரூர் ,சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு, மேயர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் உள்ளதாவது: பழங்குடியின பெண்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோளூர், தேவர்சோலா ஆகிய பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின பொதுப் பிரிவில் கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்கள்

பெண்கள்

ஆதி திராவிடர் பெண்களுக்கு, தேசூர் (திருவண்ணாமலை), மருதூர் (கரூர்), வாலாஜாபாத் (காஞ்சி), தலைஞாயிறு (நாகை), கீளாம்பாடி (ஈரோடு), கோத்தகிரி (நீலகிரி), மூலக்கரைப்பட்டி (திருநெல்வேலி), திருப்பணந்தாள் (தஞ்சை), புதுப்பாளையம் (திருவண்ணாமலை), கீழ்வேளூர் (நாகை), இடைக்கழிநாடு (செங்கல்பட்டு), கணியூர் (திருப்பூர்), ஓவேலி (நீலகிரி), சின்னக்கம்பாளையம் (திருப்பூர்), கீழ்குந்தா(நீலகிரி), புதுப்பட்டி (தேனி), பூலாம்பாடி (பெரம்பலூர்), ஆயக்குடி (திண்டுக்கல்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்),

 43 பேரூராட்சிகள்

43 பேரூராட்சிகள்

புலியூர்(கரூர்), பள்ளிகொண்டா (வேலூர்), முதூர் (திருப்பூர்), இலஞ்சி(தென்காசி), மீஞ்சூர் (திருவள்ளூர்), அச்சிறுப்பாக்கம் (செங்கல்பட்டு), சுந்தரபாண்டியாபுரம் (தென்காசி), உதயேந்திரம் (திருப்பத்தூர்), குளத்துப்பாளையம் (திருப்பூர்), வேடபட்டி (கோவை), தேவதானப்பட்டி (தேனி), மெலட்டூர் (தஞ்சை), நெய்க்காரப்பட்டி(திண்டுக்கல்), பேளூர் (சேலம்), காட்டுப்புதூர் (திருச்சி), கொரடாச்சேரி (திருவாரூர்), தொட்டியம் (திருச்சி), விரகனூர் (சேலம்), பெத்தநாயக்கன்பாளையம் (சேலம்), அடிக்கரட்டி (நீலகிரி), மரக்காணம் (விழுப்புரம்), ஹுலிகள் (நீலகிரி), பாலசமுத்திரம் (திண்டுக்கல்), வீரபாண்டி(தேனி) ஆகிய 43 பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆதிதிராவிடர்

ஆதிதிராவிடர்

ஆதிதிராவிடர் பொதுப் பிரிவுக்கு, செந்தாரைப்பட்டி(சேலம்), நடுவட்டம் (நீலகிரி), கோம்பை(தேனி), அரும்பாவூர்(பெரம்பலூர்), பி.மல்லாபுரம்(தர்மபுரி), ருத்ராவதி(திருப்பூர்), அனந்தபுரம்(விழுப்புரம்), திருப்போரூர்(செங்கல்பட்டு), எஸ்.கொடிக்குளம்(விருதுநகர்), பேரளம்(திருவாரூர்), பாப்பிரெட்டிப்பட்டி(தர்மபுரி), கங்குவார்பட்டி(தேனி), ஆர்.புதுப்பட்டி(நாமக்கல்), மணிமுத்தாறு(திருநெல்வேலி), ஆலங்காயம்(திருப்பத்தூர்), தென்கரை(தேனி), கீரனூர்(திண்டுக்கல்),

 42 பேரூராட்சிகள்

42 பேரூராட்சிகள்

தியாகத்துருவம் (கள்ளக்குறிச்சி), திருவேங்கடம் (தென்காசி), தேரூர் (கன்னியாகுமரி), வேப்பத்தூர் (தஞ்சை), மணல்மேடு (மயிலாடுதுறை), எஸ்.புதூர் (தென்காசி), கருங்குழி (செங்கல்பட்டு), சீராப்பள்ளி (நாமக்கல்), தாமரைக்குளம் (தேனி), ஆய்குடி (தென்காசி), கொங்கனாபுரம் (சேலம்), காளப்பநாயக்கன்பட்டி (நாமக்கல்), அகரம் (திண்டுக்கல்), கீழ்பெண்ணாத்தூர் (திருவண்ணாமலை), பி.மீனாட்சிபுரம் (தேனி), சித்தையன்கோட்டை (திண்டுக்கல்), படைவீடு (நாமக்கல்), பட்டினம் (நாமக்கல்), கடத்தூர்(தர்மபுரி), ஹைவேவிஸ் (தேனி), ஆதனூர் (நாமக்கல்), கருப்பூர்(சேலம்), நாமகிரிப்பேட்டை (நாமக்கல்), கடையம்பட்டி(சேலம்), மாமல்லபுரம் (செங்கல்பட்டு) ஆகிய 42 பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுப்பிரிவு

பொதுப்பிரிவு

பொதுப்பிரிவு பெண்களுக்கு ஆரணி(திருவள்ளூர்), நாரவாரிகுப்பம்(திருவள்ளூர்) உள்பட 200 பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற பேரூராட்சிகள் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது" என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu government announces, the reservation for the town panchayat in the urban local elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X