பஸ் கட்டணத்தை உயர்த்த மாட்டோம்.. மீண்டும் வரும் அம்மா வாட்டர்.. அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளது என்று வெளியான செய்திகளுக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மோசமான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்து விரிவாக விளக்கி இருந்தார். தமிழ்நாட்டின் மொத்த கடன் 2021 - 22ம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கையின்படி ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார்.

அதோடு தமிழ்நாட்டின் பொதுக்கடன் மட்டும் 26.69 சதவிகிதமாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் மொத்தம் ரூ.2,63,976 கடன் உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

வரி

வரி

அதோடு பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்கினால் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 59 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் அறிவித்து இருந்தார். அதோடு வரி உயர்வு குறித்தும் அமைச்சர் பிடிஆர் பேசி இருந்ததால் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்கிறதோ என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக இணையத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு விவாதங்கள் நடந்து வந்தன.

 கட்டணம்

கட்டணம்

இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், போக்குவரத்து கழகம் இனி புதுப்பொலிவு பெறும். இனி கழகம் புதிய திட்டங்களோடு சிறப்பாக செயல்படும். தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்களை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை.

உயர்வு இல்லை

உயர்வு இல்லை

தற்போது பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது. நிதி சுமை இருந்தாலும் அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. வண்டலூரில் கட்டப்பட்டுவரும் பேருந்து நிலைய பணிகளை விரைவில் முடிக்க உள்ளது. விரைவில் இந்த நிலையம் செயல்பாட்டுக்கு வரும்.

சேவை

சேவை

மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றவே நினைக்கிறோம். இதற்கு முன் பேருந்து நிறுத்தங்களில் அம்மா குடிநீர் விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் அதேபோல் விற்பனை செய்ய ஆலோசனை செய்து வருகிறோம். இதற்கான இறுதிக்கட்ட ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Recommended Video

    Tamilnadu-ல் பேருந்து கட்டணம், மின் கட்டணம் உயரப் போகிறதா? PTR சொல்வதென்ன
    தண்டனை

    தண்டனை

    முந்தைய ஆட்சியில் தவறு செய்தவர்கள் அதற்கான தண்டனையை அளிக்க வேண்டும். சட்டப்படியே ரெய்டு நடக்கிறது. தவறு செய்தவர்கள் அதற்கான பலனை எதிர்கொள்ள வேண்டும், என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் குறிப்பிட்டார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+