வேற லெவலில் மாறும் வண்டலூர் ஜூ..அருங்காட்சியகம்..7 டி தியேட்டர்..வன விலங்குகள் பற்றி விழிப்புணர்வு
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3டி மற்றும் 7டி திரையரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக ரூ.4.36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மக்களுக்கு ஆகச்சிறந்த பொழுதுபோக்கு தலமாக இருப்பது வண்டலூர் உயிரியல் பூங்காதான். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த பூங்காவை மாநில அரசும், வனத்துறையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. 160 ஆண்டுகள் பழமையான இந்த பூங்காவில் தற்போது இல்லாத உயிரினங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஆயிரக்கணக்கான உயிரினங்களை வண்டலூர் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

பட்டாம்பூச்சிகள் தொடங்கி அரிய வகை பறவைகள், புலி, சிங்கம், ஒட்டகச்சிவிங்கி, நீர் யானை என ஏராளமான உயிரினங்கள் இங்கு இருக்கின்றன. இவற்றை பராமரிக்கவும், நோய்களிலிருந்து பாதுகாக்கவும் இரவும் பகலுமாக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். குழந்தைகள் மற்றும் மக்கள் மத்தியில் வன விலங்குகள் குறித்தும் சூழலியல் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்திட இந்த பூங்கா பெரிதும் உதவி புரிந்து வருகிறது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது 180 வகைகளை சேர்ந்த 2,500 உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவுக்கு என தனி வரலாறு உள்ளது. இந்த வரலாறே பூங்காவின் தனிச்சிறப்பு என்று கூறலாம். இந்த பூங்கா 1854ல் ஒரு சிறுத்தை மற்றும் புலியுடன் தொடங்கப்பட்டது. முதலில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள புறநகர் ரயில் நிலையத்திற்கு பின்னால் அமைந்திருந்தது. ஆனால் இப்பகுதியில் ஏற்பட்ட ஒலி மாசு காரணமாக 1975ல் இது வண்டலூருக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த பூங்காவின் உண்மையான வயது 168.
பூங்காவில் உள்ள உயிரினங்களை 24 மணி நேரமும் நேரலையில் மக்கள் கண்டுகளிக்கும் வசதியும் உள்ளது. பூங்காவில் புதியதாக 'நீர்வாழ் உயிரின காட்சி சாலை' ரூ.23 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. சமீபத்தில் புவனேஸ்வரில் நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மாநாட்டில், நாட்டின் சிறந்த பூங்கா என்கிற விருதை இது வென்றது. இந்நிலையில் இப்பூங்காவை மேலும் மேம்படுத்திட மேலும் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதாவது, ரூ.4.36 கோடி ரூபாய் செலவில், 3டி மற்றும் 7டி திரையரங்கம் அமைக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அரசாணையில், "சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் வருங்கால தலைமுறையினருக்கு இயற்கை பாரம்பரியங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமான ஒன்றாகிறது. இதற்காக வண்டலூர் உயிரியல் பூங்காவில், உயிரியல் பூங்கா அருங்காட்சியகம் ஜுடோரியம் மற்றும் திரையரங்கம் ஆகியவற்றை அமைக்க அரசுக்கு வனத்துறை தலைவர் கருத்துரு அனுப்பியுள்ளார்.
அதில் வனவிலங்குகளை அதன் வாழ்விடங்களில் இளம் தலைமுறையுடன் மனதில் ஒரு நேர்மறையான மாற்றத்தை கொண்டுவர முடியும். அதன் மூலம் உயிரினம் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்து அவர்கள் மனதில் ஆர்வத்தையும் ஏற்படுத்த வேண்டும். இதற்காக வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள பழைய அரங்கத்தை 3d மற்றும் 7d தொழில்நுட்பத்தில் திரையரங்குகள் அமைத்து புதுப்பிக்கப்படும்.
பார்வையாளர்கள் புதிய வழிமுறையில் வனவிலங்குகளை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட பூங்கா அருங்காட்சியகத்தில் பல்வேறு உயிரினங்களின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்படும் எனவும், இதற்காக ரூபாய் 4.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் , பணிகளை 3 ஆண்டுகளில் முடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த கருத்துருவை அரசு ஏற்றுக்கொண்டு அதற்கான நிர்வாக அனுமதியை வழங்கியுள்ளது" என்று கூறியுள்ளார்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications