Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயகாந்துக்காக ஓடி வந்த தமிழக அரசு .. பிரேமலதாவுக்கு தந்த நம்பிக்கை.. என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக விஜயகாந்துக்கு எந்த மருந்துகள் தேவை என்றாலும் தமிழக அரசு சார்பில் வழங்குமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 18ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் சளி, காய்ச்சல், இருமல் பிரச்சினைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து கடந்த 23 ஆம் தேதி மியாட் அறிக்கை வெளியிட்டிருந்தது.

Tamilnadu government is inquiring to Premalatha about Vijayakanth health issue

அதில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு அவர் நன்றாக ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மருந்துகள் அனைத்தையும் அவர் உடல்நிலை ஏற்று கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, விஜயகாந்த் சுயநினைவோடு இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில்தான் அவருக்கு அங்கு கிட்டத்தட்ட10 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியானது. அதில் விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை.

அவருக்கு 14 நாட்கள் சிகிச்சை தேவைப்படுகிறது. நுரையீரல் பிரச்சினைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் உடல்நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வாயிலாக தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தமிழக அரசு சார்பில் விசாரிக்கப்பட்டதாகவும் மனைவி பிரேமலதாவிடம் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது அரசு தரப்பிலிருந்து என்ன உதவிகள் தேவை என்றாலும் தயங்காமல் கேட்டுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

Tamilnadu government is inquiring to Premalatha about Vijayakanth health issue

அது மட்டுமல்லாமல் நுரையீரல் பிரச்சினை உள்ளதால் விஜயகாந்துக்கு எந்த மருந்துகள் தேவைப்பட்டாலும் அரசு தரப்பிலிருந்து வழங்குமாறும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். மேலும் அவருடைய உடல்நிலையை கவனித்துக் கொள்ளும் மருத்துவர்களும் மருத்துவ நிர்வாகமும் தொடர்ந்து விஜயகாந்த் உடல்நிலை குறித்தும் சிகிச்சை குறித்தும் அரசுக்கு அப்டேட் கொடுத்து வருகிறார்களாம்.

விஜயகாந்த் மீது முதல்வர் ஸ்டாலினுக்கு அதிக பாசம் உள்ளது. ஒரு முறை உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்தை ஸ்டாலின் நேரில் போய் சந்தித்து நலம் விசாரித்தார். அது போல் விஜயகாந்த் கட்சியிலிருந்து யாரையும் திமுகவில் அழைத்து வந்து அவருக்கு மேலும் மனஉளைச்சலை கொடுக்கக் கூடாது என்றும் திமுக கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+