கலைஞரின் கனவு இல்லம்! எவ்வளவு நிதி ஒதுக்கீடு? 15 மாவட்டங்களுக்கு முன்னுரிமை.. வந்தது ஆணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 15 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வீடு கட்டுவதற்கான ஆணைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.

குடிசையில்லா தமிழ்நாடு என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு நனவாக கலைஞர் கனவு இல்லம் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை தமிழக அரசு அடுத்த மாதம் தொடங்குகிறது.

tamil nadu

இந்த திட்டத்தின் கீழ் அடுத்த 6 ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக அரசு சட்டசபையில் தெரிவித்திருந்தது. இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ 3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வீடு ரூ 3.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது.

2024- 2025 ஆம் நிதியாண்டில் ஒரு வீட்டுக்கு ரூ 3.10 லட்சம் என்ற அளவில் ஒரு லட்சம் வீடுகளுக்கு ரூ 3100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 5ஆம் தேதிக்குள் பணியானை வழங்கவும் பயனாளிகளை வரும் 25ஆம் தேதிக்குள் தேர்வு செய்யவும் இந்த பட்டியலை இந்த மாதம் 30ஆம் தேதி நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 10ஆம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகள் அனைத்தும் 360 சதுர அடியில் சமையலறையுடன் இருக்க வேண்டும். 300 சதுர அடி ஆர்சிசி கூரையுடன் மீதமுள்ள 60 சதுர அடிக்கு தீப்பிடிக்காத கூரை அமைக்கப்பட வேண்டும். வீட்டின் சுவர்கள் செங்கல், இன்டர்லாக் பிரிக், ஏஏசி பிளாக் உள்ளிட்டவைகளால் கட்டப்பட வேண்டும்.

வீட்டுச் சுவர்கள். நாட்டுச் செங்கற்கள் (Country Bricks), சாம்பல் செங்கற்கள் (Fly Ash bricks), திட பிளாக்குகள்(Solid Blocks), இன்டர்லாக் பிளாக்குகள் (Inter locking ரசிசி பிளாக்குகள் (ACC blocks) ஆகியவை மற்றும் சிமெண்ட் கலவை பயன்படுத்தி
கட்ட வேண்டும்.

எந்த வித காரணத்தையும் கொண்டு சிமென்டிற்கு பதிலாக மணல் கலவையை பயன்படுத்தவே கூடாது. மண் கவர் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. செலவு குறைந்த மற்றும் விரைவான கட்டுமான தொழில்நுட்பம் இந்த திட்டத்தில் அனுமதிக்கப்படலாம். இந்த திட்டத்திற்கு கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், உள்ளிட்டோர் அடங்கிய குழு இந்த திட்டத்திற்கு தகுதியான பயனாளியை தேர்வு செய்ய வேண்டும்.

கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் மறுகணக்கெடுப்பு பட்டியலில் இடம் பெற்று குடிசை வீடுகளில் வழங்கப்பட வேண்டும். தற்போது வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+