சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக அரசு ஊழியர்களுக்கு அடுத்த செக்.. போராட்ட நாட்களுக்கு சம்பளம் கிடையாது

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜாக்டோ ஜியோ அமைப்பின் 70 பேர் சிறையில் அடைப்பு- வீடியோ

    சென்னை: போராட்ட நாட்களுக்கு சம்பளம் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    9 அம்ச கோரிக்கையை முன்வைத்து, கடந்த 22ம் தேதி முதல் ஜேக்டோ ஜியோ அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 95 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

    Tamilnadu government will not give salary to the striking employees

    இந்த நிலையில், போராட்ட நாட்களுக்கு சம்பளம் தரப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. போராட்டம் துவங்கிய 22-ம் தேதி முதல் வருகைப்பதிவேடு கணக்கெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சனி, ஞாயிற்றுகிழமையும் சம்பளம் கிடையாது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் 31ம் தேதி வழங்க இருந்த சம்பளம் நிறுத்திவைக்கப்படுகிறது. சம்பள பில்லை அனுப்பாமல் தாமதிக்கிறார்களாம். இதனால் இந்த மாத சம்பளம் 31ம் தேதிக்குள் வர வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

    போராட்டத்தில் ஈடுபடும் பிற அரசு ஊழியர்களுக்கும் இதே நிலைதான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், அரசு ஊழியர்களுக்கு அடுத்த செக்கை வைத்துள்ளது அரசு.

    English summary
    Tamilnadu government will not give salary to the employees who were on strike since January 22.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X