ரிப்போர்ட் கேட்ட ஆளுநர் ஆர்.என் ரவி.. லெட்டர் அனுப்பிய தலைமை செயலாளர்.. பரபரக்கும் டாப் அதிகாரிகள்
சென்னை: தமிழ்நாடு தலைமை செயலாளர் வெ இறையன்புவிடம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி முக்கியமான ரிப்போர்ட் ஒன்றை கேட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி அடுத்தடுத்து முக்கியமான பல சந்திப்புகள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்களை ஆளுநர் சந்தித்தார். இதில் திமுக எம்பிக்களுக்கு எதிராகவும், சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும் அண்ணாமலை ஆளுநரிடம் முறையிட்டார்.
இதற்கு மறுநாளே முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடங்கி நீட் ரத்து வரை பல்வேறு விஷயங்கள் குறித்து ஆளுநருடன் முதல்வர் பேசியதாக கூறப்பட்டது.

பிரதமர்
அதன்பின் சில நாட்கள் கழித்து தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக ஆளுனரை நேரில் சந்தித்துபுகார் அளித்து இருந்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து டெல்லி சென்ற ஆளுநர் பிரதமர் மோடியை சந்தித்தார். தமிழ்நாடு அரசியல், பாதுகாப்பு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இவர்கள் ஆலோசனை செய்தனர். அதன்பின் ஆளுநர் ஆர். என் ரவி டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்தார். ஆளுநரின் அடுத்தடுத்த சந்திப்புக்களால் அரசியல் களம் பரபரப்பாக இருந்தது.

ரிப்போர்ட்
இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாடு தலைமை செயலாளர் வெ இறையன்புவிடம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி முக்கியமான ரிப்போர்ட் ஒன்றை கேட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி, ஆளுநர் தற்போது தமிழ்நாடு நலத்திட்டங்கள் குறித்து தலைமை செயலாளரிடம் ரிப்போர்ட் கேட்டு இருக்கிறார். ஒவ்வொரு துறையிலும் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் என்ன என்று கேட்டுள்ளார்.

நலத்திட்டங்கள் என்ன?
நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் என்னென்ன, அதில் எவ்வளவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள், பயனடைந்த மக்களின் விவரங்கள் குறித்த ரிப்போர்ட்டை ஆளுநர் கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆளுநர் ஆர். என் ரவி ரிப்போர்ட் கேட்ட நிலையில் தலைமை செயலாளர் வெ இறையன்பு இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார் என்று கூறப்படுகிறது.

உயர் அதிகாரிகள்
ஒவ்வொரு துறையிலும் உள்ள உயர் அதிகாரிகள், துறை தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோருக்கு அவர்களின் துறை குறித்த ரிப்போர்ட்டை சமர்ப்பிக்கும்படி தலைமை செயலாளர் வெ இறையன்பு கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆளுநரிடம் ரிப்போர்ட் அளிக்க வசதியாக ஒவ்வொரு துறை அதிகாரிகளும் முழுமையான விவரங்களை அளிக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் வெ இறையன்பு துறை அதிகாரிங்களுக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளார்.

ரிப்போர்ட்
ஆளுநர் தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையும் எப்படி இயங்குகிறது, நலத்திட்டங்கள் என்ன நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறார். இதனால் உங்கள் துறை குறித்த விவரங்களை முழுமையாக வெளியிடுங்கள். உங்கள் ரிப்போர்ட் விளக்கமாக இருக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் வெ இறையன்பு தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

பரபரப்பு
இதையடுத்து ஒவ்வொரு துறையிலும் இருக்கும் டாப் அதிகாரிகள் தற்போது இந்த ரிப்போர்ட்டை தயாரிக்க தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது. புதிய அரசு பதவி ஏற்றபின் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள், பயன் அடைந்த மக்கள் விவரங்கள், கிடப்பில் கிடக்கும் திட்டங்கள் என்று பல்வேறு விஷயங்களை ரிப்போர்ட்டாக தயார் செய்து வருவதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications