சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களுக்கு.. 'தகைசால் தமிழர்' விருது.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழின வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைக் கவுரவிக்கும் வகையில் 'தகைசால் தமிழர்' என்ற புதிய விருதை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக 'தகைசால் தமிழர்' என்ற புதிய விருதைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Tamilnadu govt announces new thagaisal tamilar award for those who made great contributions Tamil Race

இந்த விருதைப் பெறுபவர்களுக்கு, சுதந்திர தின விழாவில் 10 லட்ச ரூபாய் காசோலையும் பாராட்டுச் சான்றிதழையும் முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, 'தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்ய முதலமைச்சர் தலைமையில், தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் 'தகைசால் தமிழர்' விருது பெறும் விருதாளருக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திரதின விழாவின்போது, முதலமைச்சரால் வழங்கப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Chief Minister Stalin ordered to creation of a new award called 'Thakaisal Tamilar' award. This will be awarded for those who have made great contributions to the development of the Tamilnadu and the Tamil race.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X