பாராலிம்பிக்ஸில் வெள்ளி வென்ற.. மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்க பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ 2 கோடி ஊக்கப் பரிசை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா சார்பில் 9 வகையான போட்டிகளில் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

மாரியப்பனுக்கு வெள்ளி
இன்று நடைபெற்ற ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் இரண்டு பதக்கங்கள் கிடைத்தன. உயரம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் 1.86 மீட்டர் உயரத்தைத் தாண்டிய இந்திய வீரர் மாரியப்பன் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். அதேபோல மற்றொரு இந்திய வீரரான ஷரத் குமார் வெண்கலம் வென்றார். 1.88 மீட்டர் உயரத்தைத் தாண்டிய அமெரிக்காவின் சேம் க்ரேவ் தங்கம் வென்றார்.

2ஆவது பதக்கம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் அவர் தங்கம் வென்றிருந்தார். இந்நிலையில், தொடர்ந்து 2ஆவது பாராலிம்பிக் போட்டியில் அவர் பதக்கம் வென்றுள்ளார். பதக்கம் வென்ற மாரியப்பனுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
முதல்வர் ஸ்டாலின் மாரியப்பனை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியா தொடர் வெற்றிகளைக் குவித்துவருவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து இரண்டாவது முறையாக உயரம் தாண்டுதலில் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மாரியப்பன் தங்கவேலு, உயரம் தாண்டுதல் மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்றுள்ள சரத்குமார் மற்றும் சிங்ராஜ் அதானா ஆகிய மூவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ 2 கோடி ஊக்கப்பரிசு
இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரிப்பனுக்கு ரூ 2 கோடி ஊக்கப் பரிசு அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன் மாரியப்பனின் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைகொள்கிறது. அவரது சாதனையைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது. சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள்!" எனப் பதிவிட்டுள்ளார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications