செஸ் ஒலிம்பியாட்டில் முதல்முறை! தமிழக அரசின் கலக்கல் திட்டம்! வியந்து பாராட்டும் வெளிநாட்டு வீரர்கள்
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் முதல்முறையாகத் தமிழக அரசு எடுத்துள்ள முன்னெடுப்பு வெளிநாட்டு வீரர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
தலைநகர் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதல்முறையாக நடைபெறுகிறது. கடந்த ஜூலை 28ஆம் தேதி தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் இந்த போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணிகள் இதுவரை இதில் மிக சிறப்பாக விளையாடி வருகிறது.

செஸ் ஒலிம்பியாட்
இந்தியாவில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 3 அணிகள் கலந்து கொள்கின்றன. மேலும், உலகெங்கும் இருந்து சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொண்டு உள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் தங்க ஏதுவாக மாமல்லபுரத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சொகுசு விடுதி, போட்டி நடைபெறும் இடங்கள் முழுவதுமாக போலீசார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

வெளிநாட்டு வீரர்கள்
செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொள்ளச் சென்னை வந்த வெளிநாட்டு வீரர்களுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் விமான நிலையத்திலேயே மிக உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கிருந்து அவர்கள் விடுதிக்கு எவ்வித சிக்கலும் இல்லாமல் வரத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடந்துள்ளதாக வெளிநாட்டு வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

பாராட்டு
சென்னை ஏர்போர்ட்டில் தரையிறங்கியது முதல் எந்தவொரு பிரச்சினையையும் சந்திக்கவில்லை என்று பாராட்டி வருகின்றனர். மேலும், விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளையும் ஒரு பிடி பிடித்து வருகின்றனர். வீரர்களுக்கு வழங்க என்றே பிரத்தியேகமான உணவுகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலான வீரர்கள் தென்னிந்தியா உணவுகளையே விரும்பி சாப்பிடுவதாகக் கூறப்படுகிறது.

புதிய முயற்சி
இதனிடையே வெளிநாட்டு வீரர்களின் மனவழுத்தத்தைக் குறைக்கவும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் தமிழக அரசு சார்பில் யோகா மற்றும் தியான பயிற்சிகள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காகத் தமிழக அரசின் இயற்கை யோகா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட யோகா மருத்துவர்கள் இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

யோகா முயற்சி
இந்த யோகா பயிற்சியில் வெளிநாட்டு செஸ் வீரர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொள்வதாக யோகா பயிற்சி கொடுக்கும் ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். மிக முக்கியமான போட்டிகள் அடுத்தடுத்து நடக்கும் நிலையில், யோகா பயிற்சிகள் அமைதியைத் தரவும் மனதை ஒருங்கிணைக்கவும் பயன்படுவதாக வெளிநாட்டு வீரர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதற்கு முன்பு, ஒலிம்பியாட் போட்டிகளில் எங்கும் யோகா பயிற்சியைப் பெற்றது இல்லை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பயன்படுகிறது
இது தொடர்பாக லூயிஸ் ஃபிரடெரிசியா கூறுகையில், "நான் இதுவரை 7 செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்று உள்ளேன். இதுவரை எங்கும் எனக்கு யோகா, தியானப் பயிற்சிகள் எனக்குக் கிடைத்ததில்லை. ஆனால், இந்த முறை நான் யோகா கற்றுக்கொண்டேன். போட்டிகளின் போது இது உதவும் என நம்புகிறேன். இது எனது மனசை லேசாகுவதை உணர முடிகிறது" என்று தெரிவித்தார்.
Recommended Video

பாராட்டு
இவரைப் போலவே இன்னும் பல வெளிநாட்டு வீரர்கள் ஆர்வத்துடன் யோகா கற்று வருகின்றனர். கடந்த காலங்களில் புத்துணர்ச்சிக்காக போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையைக் கையாள்வார்கள். ஆனால் இந்த முறை தான் யோகா, தியானப் பயிற்சிகள் வீரர்களுக்குக் கிடைத்துள்ளதாக FIDE அமைப்பைச் சேர்ந்தவர்களும் தெரிவித்து உள்ளனர். யோகா மற்றும் தியானப் பயிற்சிகளை வெளிநாட்டு வீரர்களிடம் எடுத்துச் செல்ல தமிழக அரசு எடுத்துள்ள இந்த முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications