Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபாஷ்..! கொரோனா 2ஆம் அலையை போலவே.. கொரோனா பிந்தைய பாதிப்புகளை தடுக்க.. திமுக அரசின் சூப்பர் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை கட்டுக்குள் வந்துள்ள போதிலும், கொரோனா பிந்தைய பாதிப்பால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா 2ஆம் அலை கடந்த மார்ச்- ஏப்ரல் மாதம் முதலே ஏற்படத் தொடங்கியது. அப்போது நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு அதிகபட்சமாக நான்கு லட்சம் வரை கூட சென்றது.

தினசரி வைரஸ் பாதிப்புகளும்கூட நான்காயிரம் வரை சென்றது. அந்த சமயத்தில் ஒட்டுமொத்த தேசமே ஸ்தம்பித்து நின்றது.

கொரோனா 2ஆம் அலை

கொரோனா 2ஆம் அலை

இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. அதிலும், தேர்தல் பிரசாரங்களின் போது மாஸ்க், தனிமனித இடைவெளி என எல்லாம் காற்றில் பறந்து. முக்கிய தலைவர்களும்கூட மாஸ்க்கைளை அணியவில்லை. இதனால் வைரஸ் பாதிப்பு கிடுகிடு என அதிகரிக்கத் தொடங்கியது.

உச்சம்

உச்சம்


ஒரு கட்டத்தில் வைரஸ் பாதிப்பு 35 ஆயிரம் வரை கூட சென்றது. கொரோனா 2ஆம் அலையில் தமிழ்நாடு மிக மோசமாக பாதிப்பாக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பலரும் எச்சரிக்கை விடுத்தனர். டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களோ போலவே சென்னையிலும் மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள் இல்லா சூழல் உருவானது. பொதுமக்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

தீவிர நடவடிக்கை

தீவிர நடவடிக்கை

இதுமட்டுமின்றி உச்சபட்சமாகச் செங்கல்பட்டு உள்ளிட்ட சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையும்கூட ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த புதிதாகப் பொறுப்பேற்ற திமுக அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. மாநிலத்தில் கொரோனா படுக்கைகளை அதிகரிப்பது. ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர்.

பிந்தைய பாதிப்பு

பிந்தைய பாதிப்பு

இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிக விரைவில் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது தினசரி வைரஸ் பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது. ஆனால், இது மட்டும் போதாது. ஏனென்றால் கொரோனா முதல் அலைக்கும் 2ஆம் அலைக்கும் பல வித்தியாசம் உள்ளது. அதில் முக்கியமானது கொரோனா பிந்தைய பாதிப்பு.

கருப்பு பூஞ்சை

கருப்பு பூஞ்சை

2ஆம் அலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது கருப்பு பூஞ்சை பாதிப்பு. கொரோனா சிகிச்சையில் ஆன்டிபாடிகள் அதிகம் எடுத்துக் கொள்ளும்போது உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் கருப்பு பூஞ்சை பாதிப்பு எளிதாக ஏற்படுகிறது. அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் எத்தனை பாதிப்பு

தமிழ்நாட்டில் எத்தனை பாதிப்பு

தமிழ்நாட்டில் ஜூன் 3ஆம் வாரம் வரை 2,700 பேருக்குக் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 148 பேர், அதாவது 6% பேர் பலியாகினர். ஆனால், கருப்பு பூஞ்சை குறித்த விழிப்புணர்வு தற்போது மக்களிடம் அதிகரித்துள்ளது. இதனால் தினசரி பாதிப்பு 20 ஆகக் குறைந்துள்ளது. அதேபோல மக்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு வந்துவிடுவதால் உயிரிழப்புகளும் தடுக்கப்படுகிறது.

பச்சை பூஞ்சை

பச்சை பூஞ்சை

இந்நிலையில், கடந்த வாரம் தமிழ்நாட்டில் ஒருவருக்குப் பச்சை பூஞ்சை பாதிப்பும் ஏற்பட்டது. பச்சை பூஞ்சையால் பாதிக்கப்பட்ட அந்த 32 வயது நபருக்குச் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர் குணமடைந்துவிட்டார் என்றாலும்கூட இது தமிழ்நாட்டின் முன்னிருக்கும் சவாலையே காட்டுகிறது.

Recommended Video

    1000 க்கு மேற்பட்ட கொரோனா variant இருக்கு | Dr. Dr.Shanthi ravindranath Part-02 | Oneindia Tamil
    கிங் மருத்துவமனை

    கிங் மருத்துவமனை

    கொரோனா பிந்தைய பாதிப்புகளை எதிர்கொள்ளச் சரியான திட்டங்கள் இல்லை என்றால் உயிரிழப்பு ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், இதற்கும் தமிழ்நாடு அரசு பக்காவாக திட்டமிட்டு வருவதாகவே தெரிகிறது. இன்று கிண்டியிலுள்ள கிங் மருத்துவமனை வளாகத்தில் கொரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு சேவை மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    நடவடிக்கை தீவிரம்

    நடவடிக்கை தீவிரம்

    இங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் உடல்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, அவர்களுக்குத் தேவையான சிகிச்சை வழங்கப்படும். ஏற்கனவே ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் நலவாழ்வு சேவை மையம் உள்ள நிலையில், தற்போது கிங் மருத்துவமனையிலும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் கொரோனா பிந்தைய பாதிப்புகளையும் திறம்படச் சமாளிக்க முடியும் என மருத்துவ வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+