Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கல் தொகுப்பில் சிக்கல்? வேட்டி சேலை கொள்முதலில் தாமதம்? அமைச்சர் காந்தி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேட்டி சேலைகள் கொள்முதலில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பொங்கலுக்குத் திட்டமிட்டபடி வேட்டி சேலை வழங்கப்படுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. இந்நிலையில், இது குறித்து கைத்தறி மற்றும் துணி பல்துறை அமைச்சர் காந்தி விளக்கமளித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படும். இவை எப்போதும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். 2022இல் பொங்கல் பரிசுத் தொகை இல்லாமல், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை என 21 பொருட்களைக் கொண்ட பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

இருப்பினும், சில இடங்களில் பொருட்கள் தரமானதாக இல்லை என்ற புகார்கள் எழுந்தன. இதற்கிடையே 2023இல் பொங்கல் பரிசு வழங்குவது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. வரும் 2ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

 பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டது. அத்துடன் விலையில்லா வேட்டி சேலையும் வழங்கப்பட உள்ளது. இதற்கிடையே வேட்டி சேலை கொள்முதலில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் திட்டமிடப்பட்ட நேரத்தில் வேட்டி சேலை வழங்க முடியாது என்ற ரீதியில் இணையத்தில் தகவல் பரவியது.

 அமைச்சர் காந்தி

அமைச்சர் காந்தி

இதனால் பொங்கலுக்கு வேட்டி சேலை கிடைக்குமா என்பதில் பொதுமக்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் இது தொடர்பாகக் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி விளக்கமளித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகள்

இதில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூபாய் 81 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கலந்து நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொண்டனர்..

 அமைச்சர் காந்தி

அமைச்சர் காந்தி

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அமைச்சர் காந்தி பேசுகையில், "பொங்கலுக்கு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி சேலைகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம்.. தமிழக முதல்வரும் வேட்டி சேலைகளை ஆய்வு செய்துவிட்டார்.. நாங்கள் அனைவருக்கும் இலவச விலையில்லா வேட்டி சேலைகளை வழங்குவோம்.. இன்றைக்கு நாங்கள் சவால்விட்டுச் சொல்கிறோம்.. சேலைகளை வேட்டிகளை வேண்டுமானால் ஆய்வு செய்யுங்கள்..

 வேட்டி சேலைகள்

வேட்டி சேலைகள்

இப்போது திமுக ஆட்சியில் வேட்டி சேலைகள் எப்படி இருக்கிறது.. கடந்த அதிமுக ஆட்சியில் வேட்டி சேலைகள் எப்படி இருந்தது என்பதை ஆய்வு செய்யுங்கள்.. இப்போது வழங்கப்படும் வேட்டி சேலைகள் தரமாக உள்ளது உங்களுக்கே தெரியும்.. சிலர் வேட்டி சேலைகளைத் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்வதாகத் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இது தவறான கருத்து.. 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விடக் கைத்தறி மற்றும் துணி நூல் துறையை மேம்பாடு செய்துள்ளோம்.. திட்டமிட்டபடி அனைவருக்கும் உரிய நேரத்தில் வேட்டி சேலை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது" என்றார்.

 கரும்பு கொள்முதல்

கரும்பு கொள்முதல்

கடந்த ஆண்டுகளில் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம் பெற்றிருந்தது. இருப்பினும், இந்தாண்டு முதலில் அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் கரும்பு இல்லை. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் விவசாய அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களும் கூட அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் தான், பொங்கல் தொகுப்பில் கரும்பும் வழங்கப்படும் எனத் தமிழக அரசு மீண்டும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+