தமிழ்நாடு அரசு பேருந்துகளின் முன்பதிவு காலம் 60 நாட்களாக அதிகரிப்பு! புக்கிங் செய்வது எப்படி
சென்னை: தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் முன்பதிவு காலத்தை நீட்டித்து தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் தொலைதூர போக்குவரத்திற்காகப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளில் பண்டிகை காலங்களில் டிக்கெட் ரேட் தாறுமாறாக இருக்கும் நிலையில், பொதுமக்கள் பலரும் அரசு பேருந்துகள் பக்கம் வருவார்கள்.

தமிழக அரசின் பேருந்துகளில் பண்டிகை காலங்களில் மட்டும் டிக்கெட் விலையை அதிகரிக்க மாட்டார்கள். ஓராண்டில் எப்போது பயணித்தாலும் தமிழக அரசு பேருந்துகளில் ஒரே விலை தான். இதன் காரணமாகவே பண்டிகை காலங்களில் அரசு பேருந்துகள் டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிடும்.
நீட்டிப்பு: மேலும் பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு பேருந்துகளில் முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அடுத்த 30 நாட்களுக்குள் பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளலாம் என்ற விதி இருந்தது. ஆனால் இப்போது அந்த விதியை மாற்றி, முன்பதிவு காலத்தை நீட்டித்து தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வந்தது. பயணிகளின் வசதிக்காக இன்று (மார்ச் 15) முதல் பயண முன்பதிவு காலம் 30 நாட்களுக்குப் பதிலாக 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எப்படி செய்யணும்: எனவே தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மேற்கண்ட வசதியைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு http://www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications