அடுத்த 2 நாட்களுக்கு மழை வெளுக்கும்.. தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களுக்கு தீவிர கனமழை எச்சரிக்கை!
சென்னை; தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இன்னொரு பக்கம் வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு வாரமாக கடலோர மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்து வந்தது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுக்க பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது.

தாழ்வு பகுதி
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை அல்லது நாளை மறுநாள் முழுமையாக உருவாகும். இதனால் வரும் நாட்களில் மழை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற்றம் அடையும் வாய்ப்புகளும் உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் இப்போது கனமழை விட வாய்ப்பு இல்லை.

இரண்டு நாட்கள்
சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் அதி தீவிர கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் இன்று அதிகாலையில் இருந்து இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

எங்கு பெய்யும்
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு நோக்கி நகரும். இதனால் மழை படிப்படியாக அதிகரிக்கும்.. தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை
மயிலாடுதுறை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications