சென்னையில் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை- பல மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு தொடரும் மழை!
சென்னை: சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்க்கிறது. சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு கனமழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான அடுத்த 24 மணிநேரத்தில் வலுவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் நவம்பர் 14-ந் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என்கிறது வானிலை ஆய்வு மையம்.

மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் கனமழை கொட்டியது. சென்னையில் தியாகராய நகர், ஆழ்வார்பேட்டை, எழும்பூர், கோயம்பேடு என பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேபோல் புறநகரிலும் வியாழக்கிழமை இரவு மழை கொட்டியது.

இதனிடையே வடகடலோர மாவட்டங்களில் இரவு 7 மணி முதல் இரவு 10 மணிவரை அதிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 3 மணிநேரத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்கிறது வானிலை ஆய்வு மையம்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications