"ரவுடிகளின் ராஜ்ஜியம் தமிழ்நாடு".. ஓபிஎஸ் இப்படி கோபப்படுறாரே! எம்பி-பாதிரியார் இடையே என்ன பிரச்சனை?
சென்னை: திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல அலுவலகத்தில் பாதிரியாரை கொடூரமாகத் தாக்கியவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டு உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், கடுமையாக அரசை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்து இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "ரவுடிகளின் ராஜ்ஜியம் தமிழ்நாடு" என்ற கருத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை என்று சொல்லும் அளவுக்கு கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் வன்முறை வெறியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அமைச்சர்களே ரவுடிகள் போல் செயல்படுவது, அமைச்சர்களே பொதுமக்களை இழிவாகப் பேசுவது, அமைச்சர்கள் கவுன்சிலர்களையும், பொதுமக்களையும் அடிப்பது, சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளையும், ஒப்பந்ததாரர்களையும் மிரட்டுவது என்ற வரிசையில், இவற்றிற்கெல்லாம் உச்சகட்டமாக நேற்று முன்தினம் கிறிஸ்தவ மத பேராயரையே தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரின் தூண்டுதல்பேரில் அவரது ஆதரவாளர்கள் அடித்துள்ள செய்தி பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல நிர்வாகத்தின்கீழ் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தத் திருச்சபையின் பிஷப்பாக திரு. பர்னபாஸ் அவர்கள் இருக்கிறார். திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபையின் கல்வி நிலவரக் குழு செயலாளர் மற்றும் திருச்சபை கட்டுப்பாட்டின்கீழ் வரும் பாளையங்கோட்டை செயின்ட் ஜோசப் பள்ளியின் தாளாளர் பதவிகளை தி.மு.க.வைச் சேர்ந்த திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் திரு. எஸ். ஞானதிரவியம் அவர்கள் வகித்து வந்தார்.
இந்த நிலையில், அரசியலில் தனக்குள்ள செல்வாக்கினை துஷ்பிரயோகம் செய்து, பேராயருக்கு தினமும் பல தொந்தரவுகளை கொடுப்பதை திரு. ஞானதிரவியம் அவர்கள் வாடிக்கையாக வைத்திருந்ததையடுத்து, அவரை செயின்ட் ஜோசப் கல்லூரியின் தாளாளர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, அந்தப் பொறுப்பிற்கு வேறு ஒருவரை நியமித்தார் பேராயர் அவர்கள்.
இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க. மக்களவை உறுப்பினர் திரு. ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் சென்ற வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு சென்று ரகளையில் ஈடுபட்டதாகவும், இதனைத் தீர்த்து வைக்கும் வகையில், பிஷப் காட்ப்ரே நோபிள் அவர்கள் சி.எஸ்.ஐ. திருமண்டலம் சார்பில் அனுப்பப்பட்டதாகவும், இந்தத் தருணத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட தாளாளர் பொறுப்பேற்பதற்கு எதிராக திரு. ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதாகவும், சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்தை பூட்டி சாவியை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல பிஷப் அவர்களின் ஆதரவாளர்களை தி.மு.க. மக்களவை உறுப்பினர் திரு. ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக தாக்குவதும், இந்தத் தாக்குதலில் பிஷப் காட்பிரே நோபிள் அவர்கள் மோசமாக தாக்கப்பட்டதும், உதைக்கப்பட்டதும் வீடியோ காட்சிகளாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே தனது ஆதரவாளர்கள்மூலம் ஒரு பாதிரியாரையும், அவரது ஆதரவாளர்களையும் தாக்குவது என்பது கடும் கண்டனத்திற்குரியது. சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டியவர்களே சட்டம்-ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருப்பது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. தமிழ்நாட்டில் காவல் துறை என்று ஒன்று இருக்கிறதா என்று ஐயப்படக்கூடிய அளவுக்கு தமிழ்நாட்டில் அடியோடு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருக்கிறது.
காவல் துறையினர் மீதுள்ள நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்கள் இழந்துவிட்டனர். தி.மு.க. எம்.பி. உட்பட 33 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதற்குக் காரணம், இதற்கு முன்பு கவுன்சிலரையும், தி.மு.க.வினரையும் தாக்கிய அமைச்சர்கள் மீதோ, ஒப்பந்ததாரரை மிரட்டிய சட்டமன்ற உறுப்பினர் மீதோ, கல் வீசிய முன்னாள் அமைச்சர் மீதோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, பிஷப் காட்ப்ரே நோபுள் அவர்களும், திருநெல்வேலி சி.எஸ்.ஐ. பிஷப் அவர்களுடைய ஆதாரவாளர்களும், அலுவலகமும், பள்ளியும் தாக்கப்பட்டதற்கு மூல காரணமாக விளங்கிய தி.மு.க. மக்களவை உறுப்பினர் திரு. எஸ். ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்யவும்; அவர்கள்மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, சட்டத்தின்முன் நிறுத்தி, விரைவில் அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
A religious preacher was attacked in office of Church of South India (CSI) Diocese, Tirunelveli. A police complaint hs been filed. There is ongoing dispute between two group of people in running administration. A group is supported by Tirunelveli MP Gnanathiraviam while Noble is… pic.twitter.com/1i4eWu3SyY
— Thinakaran Rajamani (@thinak_) June 26, 2023
-
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications