மொழிவாரி சிறுபான்மையினருக்கு கடனுதவி வழங்க தனி கார்பரேஷன் - தமிழக அரசு உத்தரவு
சென்னை: மொழிவாரி சிறுபான்மையினர் கல்வி மற்றும் தொழில் துறையில் முன்னேற்றம் பெற அவர்களுக்கு உதவிடுவதற்காக தனி கார்பரேஷன் ஒன்றை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மற்றும் செளராஷ்டிரா மொழி பேசுபவர்கள் மொழிவாரி சிறுபான்மையினராக கருதப்படுகிறார்கள். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் மொழிவாரி சிறுபான்மையினர் சுமார் 84 லட்சம் பேர் உள்ளனர்.

மொழிவாரி சிறுபான்மையினர் தங்களுடைய மொழியில் கல்வி கற்பதை உறுதி செய்திடவும், அவர்களின் வேலை வாய்பு உள்ளிட்ட சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக தனி அமைப்பு உருவாக்கிட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பபட்டது.
இதையடுத்து, தமிழக அரசு மொழிவாரி சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான நிறுவனம் என்ற (Tamil Nadu Linguistic Minorities Social and Economic Development Corporation - TALMEDCO) அமைப்பை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் மொழிவாரி சிறுபான்மையினர் தொழில் தொடங்கிட கடனுதவி வழங்கப்படும். தொழில் முனைவோர்களாக உருவாகிட அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அரசானையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சென்னையை தலமையிடமாக கொண்டு செயல்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொழிவாரி சிறுபான்மையினர் நலனுக்கான நிறுவனத்தை உருவாக்கி அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான நிறுவனம் என்று அழைக்கப்படும் (Tamil Nadu Linguistic Minorities Social and Economic Development Corporation - TALMEDCO)
தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மற்றும் செள்ராஷ்டிரா மொழி பேசுபவர்கள் மொழிவாரி சிறுபான்மையினராக கருதப்படுகிறார்கள். மொழிவாரி சிறுபான்மையினருக்கு வேலைவ வாய்ப்பை ஏற்படுத்திடவும், தொழில் முனைவோர்களாக ஊக்கப்படுத்தவும், தொழில் தொடங்கிட கடன் உதவி வழங்கிடவும் இந்த நிறுவனம் வழி வகை செய்யும்.
தேசிய சிறுபான்மையினர் முன்னேறம் மற்றும் நிதி கழகத்தின் வழி காட்டுதலின் படி மொழிவாரி சிறுபான்மையினருக்கு கடன்கள் வழங்கப்படும். மொழிவாரி சிறுபான்மையினர் நல நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications