அட இது என்னங்க விசித்திரம்.. பவுன்சர்கள் புடை சூழ வந்த திமுக கவுன்சிலர்கள்.. சுவாரசிய சம்பவம்!
சென்னை: திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் பவுன்சர்ஸ் புடை சூழ வந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு இந்த மறைமுக தேர்தல் நடக்கிறது. கிராம ஊராட்சிமன்ற துணைத் தலைவர் பதவிக்கும் இன்று மறைமுக வாக்கெடுப்பு நடக்கிறது.
நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் மூலம் இவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மறைமுக வாக்கெடுப்பு என்பதால் சில இடங்களில் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கவுன்சிலர்
140 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கு நடந்த தேர்தலில் 138 இடங்களில் திமுக வென்றுள்ளது. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்த 1,381 இடங்களில் 1,118 இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெற்றுள்ளன. இதில் 9 மாவட்டங் ஊராட்சி தலைவர் பதவிகளையும், 74 ஒன்றிய தலைவர் பதவிகளையும் திமுகதான் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பத்தூர்
இந்த நிலையில்தான் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் இன்று அதிமுக திமுக இடையே கடும் போட்டி நடைபெற்றது. சமீபத்தில் இங்கு நடந்த சில மோதல்கள் காரணமாக இன்று நடந்த மறைமுக வாக்கெடுப்பு அதிகம் கவனம் பெற்றது. கடைசியாக இங்கு திமுகதான் ஒன்றியத் தலைவர் பதவியை பெற்றார்.

பவுன்சர்
இந்த நிலையில் இவர்களுக்கு குறைவான உறுப்பினர்கள் ஆதரவு இருந்ததால் பாதுகாப்பிற்கு திமுக உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் வந்தனர். இவர்களின் காருக்கு பின் நான்கு கார்கள் பாதுகாப்பிற்கு வந்தது. ஒவ்வொரு காருக்கு அருகில் 2-3 பவுன்சர்கள் என்று மொத்தம் 10க்கும் அதிகமான பவுன்சர் காணப்பட்டனர். காரை சுற்றி பவுன்சர்ஸ் பாதுகாப்பிற்கு நின்றனர். பெரிய பிரபலங்களுக்கும், விழாக்களுக்கும் தரப்படும் பவுன்சர்ஸ் பாதுகாப்பு இவர்களுக்கும் தரப்பட்டது இணையத்தில் வைரலானது.

திமுக
திமுகவின் சங்கீதா பாரி இங்கு ஒன்றியத் தலைவர் பதவிக்கு நிற்க வைக்கப்பட்டார். அவருக்கு திமுக உறுப்பினர்கள் ஆதரவு 5 தான் இருந்தது. பெரும்பான்மைக்கு 10 உறுப்பினர்கள் தேவை. ஆனால் அவையில் இருந்து 18ல் 6 பேர் வெளியேறிய நிலையில் 12 உறுப்பினர்கள்தான் இருந்தனர். கடைசியில் அதிமுகவின் 4, 1 சுயேச்சை, 2 பாமக என 12 உறுப்பினர்கள் ஆதரவு அளித்த நிலையில் திமுகவின் சங்கீதா பாரி ஒன்றியத் தலைவர் பதவியை கைப்பற்றினார்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications