TN Colleges: தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை.. பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதி வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது உயர் கல்வித் துறை. அது போல் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னை, செங்கலபட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு
நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 13,990 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று காலையுடன் இரவு நேர ஊரடங்கு முடிவடைந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு
வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. வரும் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் கல்லூரிகள், பள்ளிகள் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை அந்தந்த துறைகள் வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பு
இதுகுறித்து உயர்கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், அனைத்து பொறியியல், பாலிடெக்னிக், கலை அறிவியல், முதுகலை கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை
அது போல் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வரும் 31 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலமும் ஆன்லைன் வகுப்பு மூலமும் பாடம் எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு என்பதால் மாணவர்களின் நலன் கருதி 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications