Tamilnadu Lockdown: அதிகரிக்கும் கொரோனா பரவல்.. 9ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்க தடை.. அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோன பரவலை கட்டுப்படுத்த 1 முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Recommended Video

    Tamil Nadu announces Sunday lockdown, Night Curfew | OneIndia Tamil

    இந்தியாவில் கொரோனாவும் ஓமிக்ரான் பரவலும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு என பல விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது.

    தமிழகத்தில் லாக்டவுன்

    தமிழகத்தில் லாக்டவுன்

    பொங்கல் பண்டிகை இன்னும் 10 நாட்களில் கொண்டாடப்படும் நிலையில் கடைகளில் கூட்ட நெரிசல் இருக்கும் என்பதால் கொரோன பாதிப்பு அதிகரிக்கும் என அச்சம் எழுந்தது. மற்ற மாநிலங்கள் போல் கட்டுப்பாடுகள் விதித்தால் மட்டுமே சமாளிக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் அரசுக்கு அறிவுறுத்தி வந்தனர்.

    லாக்டவுன் குறித்து முதல்வர் ஆலோசனை

    லாக்டவுன் குறித்து முதல்வர் ஆலோசனை

    இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த நேற்றைய தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது. அது போல் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது.

    தமிழகத்தில் பள்ளிகள் இயங்க தடை

    தமிழகத்தில் பள்ளிகள் இயங்க தடை

    குழந்தைகள் காப்பகம் தவிர மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை நேரடியாக வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதுவோரின் எதிர்கால நலன் கருதி, 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும். கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    9ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்க தடை

    9ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்க தடை

    கடந்த 2020 மார்ச் மாதம் முதல் நீண்ட காலமாக பள்ளிகளுக்கு செல்லாமல் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9, 10,11, 12 ஆகிய வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து நவம்பர் மாதம் முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+