மே 17ம் தேதி முதல்.. மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்க இனி இ பதிவு கட்டாயம்.. தமிழக அரசு அதிரடி!
சென்னை: தமிழகத்தில் மே 17ம் தேதி முதல்மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இ பாஸ் கட்டாயமாக்கப்படுகிறது. அதேபோல் மாவட்டங்களுக்கு இடையில் அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் மேற்கொள்ள இ பாஸ் விண்ணப்பித்தற்கான இ பதிவு கட்டாயமாக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 30+ கேஸ்கள் வந்த நிலையில் தமிழகத்தில் இன்று 31892 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 195339 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 1531377 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் லாக்டவுன் விதிகள் கடுமையப்பட்டுள்ளன.

மக்கள் போக்குவரத்து
அதன்படி மக்கள் வாகனங்களில் பயணம் மேற்கொள்வதை தடுக்கும் வகையில் இ பாஸ் விதிகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு வெளியே செல்லவும், மாநிலத்திற்கு உள்ளே வரவும் மட்டுமே முன்பு இ பாஸ் விதிமுறைகள் இருந்தன. அதேபோல் வெளிநாட்டு பயணிகள் இ பாஸ் பெற வேண்டும் என்றும் விதிகள் இருந்தது.

இனி
இனிமேல் மாவட்டங்களுக்கு உள்ளே பயணம் மேற்கொள்ள இ பாஸ் விண்ணப்பித்தற்கான இ பதிவு அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை (Elderly care) போன்ற அனைத்திற்கும் மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ பதிவுமுறை (e-Registration) கட்டாயமாக்கப்படும் என்று அரசு

எப்போது
இந்த புதிய இ-பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும். நாளை, நாளை மறுநாள் மட்டும் இ பதிவு இல்லாமல் மாவட்டங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்ள முடியும். அதற்கு பின் இ பதிவு செய்து அதை காட்டி மட்டுமே பயணிக்க முடியும்.

எப்படி எடுப்பது
இதற்கு https://eregister.tnega.org/#/user/pass இணைய பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் பயணம் மேற்கொள்வதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications