டெல்லியில் ரெடியாகும் பெரிய மீட்டிங்! பறந்து வந்த அழைப்பு.. "ரகுபதியை" களமிறக்கும் முதல்வர்? பின்னணி
சென்னை: டெல்லியில் நடக்கும் முக்கிய கூட்டம் ஒன்றில் தமிழ்நாடு அரசு கலந்து கொள்ள இருக்கிறது. அது என்ன மீட்டிங்.. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது என்று பார்க்கலாம்.
உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள், மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டை ஏப்ரல் 30-ந்தேதி டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த மாநாடு, கொரோனா தாக்குதல்களால் கடந்த 2 வருடமாக நடக்கவில்லை.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் இந்த மாநாடு நடக்கிறது.

டெல்லி மாநாடு
டெல்லியில் நடக்கும் இந்த மாநாட்டினை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு முக்கியமான விஷயங்கள் இந்த மாநாட்டில் ஆலோசனை செய்யப்பட உள்ளது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் முடிக்கப்படாமல் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடித்தல் தொடர்பான ஆலோசனைகள் ஒரு பக்கம் செய்யப்பட உள்ளது.

வழக்கு எண்ணிக்கை
அதேபோல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்தல், காலிபணியிடங்களை நிரப்புதல், நீதிபதி நியமனங்களை நீதிபதிகள் கொண்ட கமிட்டியே தீர்மானிக்கும் விவகாரம், வழக்கறிஞர்களிலிருந்து சீனியாரிட்டிப்படி நீதிபதிகள் தேர்வு செய்வது சரிதானா? உள்ளிட்ட நீதித்துறை சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மாநில முதல்வர்கள்
எல்லா மாநில முதல்வர்களுக்கும் இது தொடர்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும் இது தொடர்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்வாரா? அல்லது சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை அனுப்பி வைப்பாரா ? என தெரியவில்லை. முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில்தான் டெல்லிக்கு சென்றார்.

டெல்லி பயணம்
இந்த மாத தொடக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி, டெல்லி காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். இந்த நிலையில்தான் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் கலந்துகொள்ளும் பட்சத்தில், உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை மாநாட்டில் முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் திமுகவின் சீனியர் வழக்கறிஞர்கள்.












Click it and Unblock the Notifications