ஹைபீக்கில் வைரஸ் காய்ச்சல்.. புதுவையை போல் தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா?
வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையல் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா?
சென்னை: இந்தியாவில் இன்ப்ளூயன்ஸா ப்ளூ காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது போல் தமிழகத்திலும் விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்வி அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் எழுப்பப்பட்டது.
இந்தியாவில் எச்3.எச்2 எனும் இன்ப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. தமிழகத்தில் கூட சில பகுதிகளில் இன்ப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை தமிழகத்தில் இருவர் இறந்துவிட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வந்தது. இந்த நிலையில் தற்போது எச்3.என்2 எனும் இன்ப்ளூயன்ஸா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.

பன்றி காய்ச்சல்
எச்1என்1 எனும் பன்றி காய்ச்சலை போல் எச்3.என்2 என்பதும் ஒரு திரிபு என மருத்துவர்கள் கூறுகிறார்கள். பொதுவாக சீசனல் ப்ளூக்கள் தொடர்ந்து நம்மை அச்சுறுத்தி கொண்டே வருகின்றன. அவற்றை போல்தான் இந்த எச்3என்2 வைரஸும் ஒரு வகையான ப்ளூ வைரஸாகும். இது ஏ, பி இரு வகைகளை கொண்டது. அதில் ஏ வகையை சேர்ந்ததுதான் எச்3.என்2 எனும் திரிபு என்கிறார்கள்.

காய்ச்சல்
காய்ச்சல், இருமல், வறட்டு இருமல், தொண்டை வறட்சி, தொண்டை வலி, அதீத உடல் அசதி, உடல் சோர்வு, வயிற்றுவலி, வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவை ஆகும். இந்த அறிகுறிகள் பொதுவாக எல்லா ப்ளூ காய்ச்சல்களிலும் இருக்கும், ஆனால் இந்த எச்3என்2 காய்ச்சலில் அறிகுறிகள் தீவிரமாக இருக்கின்றன. அதனால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த மருந்துகள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் கூடாது
அது போல் காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வருமாறு மாநில அரசுகள் அழைப்பு விடுக்கின்றன. மருத்துவர்களும் இதையேதான் சொல்கிறார்கள். இந்த காய்ச்சல் 101 டிகிரிக்கு மேல் 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் இருக்கும். பின்னர் சிகிச்சை பெற்றால் குறைந்துவிடும் என்கிறார்கள். இதற்கு சாதாரண காய்ச்சலுக்கு பயன்படுத்தும் பாராசிட்டாமல் எடுப்பதை விட மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வேறு மருந்துகளை பயன்படுத்தினால் நோயின் தீவிரத்திலிருந்து விடுபடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை
இந்த நிலையில் மற்ற மாநிலங்களை போல் புதுவையில் இன்ப்ளூயன்ஸா காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதனால் புதுவை அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் வரும் 26 ஆம் தேதி வரை அதாவது 10 நாட்களுக்கு 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை என புதுவை சுகாதாரத் துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்படுமா
இந்த நிலையில் புதுவையை போல் தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் வைரஸ் காய்ச்சலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை தமிழகத்தில் இல்லை என பதில் அளித்தார். அது போல் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா என அவரிடம் கேட்டதற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் அளவுக்கு காய்ச்சலின் தீவிரம் தமிழகத்தில் இல்லை என தெரிவித்திருந்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications