சிஐடி காலனி இல்லத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்! ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சிஐடி காலனி இல்லத்திற்குச் சென்று ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது 69வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். தமிழக முதல்வராக முதல்முறை ஸ்டாலின் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பிறந்த நாள் அன்று ஸ்டாலின் தொண்டர்களைச் சந்திக்கவில்லை. இப்போது கொரோனா குறைந்துள்ள நிலையில், அவர் தொண்டர்களைச் சந்தித்து அவர்களிடம் வாழ்த்து பெற்றார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக மிகப் பெரியளவில் வெற்றி பெற்ற நிலையில், அந்த உற்சாகத்துடன் திமுக தொண்டர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். எப்போதும் பிறந்த நாள் அன்று முதல்வர் ஸ்டாலின் இங்கு மரியாதை செலுத்துவது வழக்கம். அதேபோல் முதல்வர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து சென்னை சிஐடி காலனி இல்லத்திற்குச் சென்று ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார் ஸ்டாலின். அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும்,தான் எழுதிய உங்களில் ஒருவன் புத்தகத்தை ராஜாத்தி அம்மாளிடம் வழங்கினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி உள்ளது. அப்போது அமைச்சர் துரைமுருகன், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications