சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற துரைமுருகன், பொன்முடி, எடப்பாடி பழனி்சாமி!
சென்னை: தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரவேற்றனர்.
சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. இன்று முதல் ஆகஸ்டு 10 வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் பங்கேற்கவுள்ளனர். இதற்காக சர்வதேச வீரர்கள் மாமல்லபுரம் வந்து சேர்ந்துள்ளனர்.

இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க சென்னை வருகிறார். இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வரும் நிலையில், அவரை வரவேற்க பாஜக சார்பாக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் மோடி வரவேற்கும் வகையில் பேனர்கள், தோரணங்கள், கடவுளின் சிலைகள், சுவர் ஓவியங்கள் ஆகியவை செய்யப்பட்டுள்ளன.
Recommended Video
அதேபோல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். அவர் வரும் வழியில் மலர்கள் தூவி, கோஷம் எழுப்பு வரவேற்றனர். அதேபோல் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடியை தமிழக அரசு சார்பாக துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு, கே.என்.நேரு ஆகியோர் வரவேற்றனர். அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முக்கியத் தலைவர்கள், பாஜக கூட்டணிக் கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications