சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் 22.1%-ஐ கடந்த கொரோனா பாசிடிவ் விகிதம்..வெறும் 10 நாட்களில் 71% உயர்ந்த ஆக்டிவ் கேஸ்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாசிடிவ் விகிதம் 22.1%ஐ கடந்துள்ள நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை கடந்த 10 நாட்களில் மட்டும் 71% உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 கோடீஸ்வரர் ஆக மாற்றும் 1 ரூபாய் நாணயம்... அலட்சியமாக எங்கேயும் போட்டு விடாதீர்கள் கோடீஸ்வரர் ஆக மாற்றும் 1 ரூபாய் நாணயம்... அலட்சியமாக எங்கேயும் போட்டு விடாதீர்கள்

கடந்த மே 10ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, கொரோனா பரவல் விகதம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும், முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்று 33,181 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதைவிடச் சற்று குறைவாக 33,075 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1327 பேர் 12 வயதுக்குட்பட்ட சிறார்களாகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 14 வயது சிறுவன் மற்றும் இணை நோய்கள் இல்லாத 78 பேர் உட்பட 335 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாசிட்டிவ் விகிதம்

பாசிட்டிவ் விகிதம்

தமிழகத்தில் தற்போது ஒட்டுமொத்த பாசிட்டிவ் விகிதம் 22.1%ஆக அதிகரித்துள்ளது. இது சென்னையின் (21.2%) பாசிட்டிவ் விகிதத்தை விட அதிகமாகும். அதாவது தலைநகர் சென்னையைக் காட்டிலும் பிற மாவட்டங்களில் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது. ஒட்டுமொத்த கொரோனா பரிசோதனையில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது என்பதை பாசிடிவ் விகிதம் எனப்படும்.

பரிசோதனை விகிதம் குறைப்பு

பரிசோதனை விகிதம் குறைப்பு

தமிழகத்தில் நேற்று முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது 1.49 லட்சமாகக் குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து மாநிலத்தில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு மூன்று நாட்களாக 33 ஆயிரத்தில் நிலைபெற்றுள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

சென்னையைப் பொறுத்தவரை இன்று தினசரி கொரோனா பாதிப்பு 6150ஆக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 2,19,342ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் இன்று 2,31,596ஆக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் மாநிலத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 71% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Corona test positive rate and active cases in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X