இறுகும் போலீஸின் பிடி.. தலைமறைவாக உள்ள பப்ஜி மதன் மீது... 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சென்னை: தற்போது தலைமறைவாக உள்ள யூடியூபர் பப்ஜி மதன் மீது பெண்களை ஆபாசமாகப் பேசியது, தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
பப்ஜி வீடியோ கேம் குறித்த ட்ரிக்குகள் விளக்கி தனது யூடியூப் தளத்தில் வெளியிட்ட வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் பப்ஜி மதன். யூடியூப் தளத்தில் தனது கேமை நேரலையில் ஒளிபரப்பும் இவர் அந்த விளையாட்டின் நுட்பங்களை விளக்குவார்.

இருப்பினும், நேரலையிலேயே பெண்களை மிகவும் ஆபாசமாகவும் அருவெறுக்கதக்க வகையிலும் வசைபாடிக் கொண்டே விளையாடுவார். பெண்கள் மட்டுமின்றி சிறுமிகள் குறித்தும் ஆபாசமாகப் பேசுவதை இவர் வழக்கமாக வைத்துள்ளார். இது குறித்து யாராவது கேட்டால், அவர்களையும் அதேபோல வசைபாடுவார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பப்ஜி மதன் மீது புளியந்தோப்பு சைபர் க்ரைம் பிரிவில் இருவர் புகார் அளித்திருந்தனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த பப்ஜி மதனை நேரில் ஆஜராகும்படி போலீசார் தெரிவித்திருந்தனர். இருப்பினும் காவல் நிலையத்திற்கு வராமல் தலைமறைவானார் பப்ஜி மதன்.
தற்போது போலீசார் பப்ஜி மதனை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில், தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்களை ஆபாசமாகச் சித்தரித்துப் பேசுதல், ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications