சிவந்த முதல்வர் ஸ்டாலினின் முகம்.. சட்டமன்றத்தில் வந்து விழுந்த அட்வைஸ்.. ரெடியான போலீஸ்.. காரணம்?
சென்னை: கடந்த சில நாட்காக சில போலீஸ்காரர்களின் செயல்பாடுகள் பொது வெளியில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் சமீப நாட்களாக காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன்னர் இரவு 11 மணியளவில் தீபக் என்பவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை மடக்கிய காவல்துறையினர் குடித்துவிட்டு வாகனம் ஓட்கிறீர்களா? என்று கேள்வியெழுப்பினார். தீபக் இல்லையென்று பதிலளித்திருக்கிறார். ஆனால் அவரை நம்பாத காவல்துறையினர் தாங்கள் வைத்திருந்த சுவாச சோதனை கருவி மூலம் பரிசோதித்தனர்.
அதில் தீபக் 45% அளவுக்கு மது அருந்தியுள்ளார் என்று காட்டியது. இதனையடுத்து இது தொடர்பான அபராதத்திற்கான பில் அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் விஷயம் என்னவெனில் அவர் குடித்திருக்கவில்லை. இதனையடுத்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். காவல்துறையினர் இதனை ஏற்கவில்லை. தீபக்கும் இந்த விஷயத்தை விடவில்லை. இப்படி இருக்கையில் வாக்குவாதம் முற்றியது. பின்னர் காவலர்கள் வேறு ஒரு மெஷினை கொண்டு பரிசோதித்துள்ளனர். அதில் 0% என்று காட்டியுள்ளது.

இதனையடுத்து தீபக்கை காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் சென்னையில் நடந்தது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியது. அதேபோல வடசென்னையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியது. திருவொற்றியூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் கோட்டமுத்து, தனசேகர். இவர்களுடன் மேலும் 3 காவலர்கள் கடந்த மார்ச் மாதம் திருவொற்றியூர் கணக்கர் தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு சாப்பிட சென்றிருக்கிறார். இந்த ஓட்டலில் பரோட்டாவும், பாயாவும் பேமஸ் என்பதால் வழக்கமாகவே ஓட்டலில் கூட்டம் அலைமோதும்.
சம்பவத்தன்றும் ஓட்டலில் கணிசமான அளவுக்கு ஆட்கள் இருந்திருக்கின்றனர். இந்நிலையில் சாப்பிட சென்ற காவலர்கள் பரோட்டாவை ஆர்டர் செய்துள்ளனர். ஆர்டர் செய்ததைப்போலவே பரோட்டா வந்திருக்கிறது. அத்துடன் வைக்கப்பட்ட பாயா சீக்கிரமாக தீர்ந்துவிட்ட நிலையில், இரண்டாவது ரவுண்ட் பாயா கேட்டிருக்கிறார்கள். அப்போது பாயா வருவதற்கு சற்று தாமதமாகியுள்ளது. இங்குதான் வாக்குவாதம் எழுந்திருக்கிறது. எவ்வளவு நேரம் பாயாவுக்காக வெயிட் பண்றது என சில தடித்த வார்த்தைகளால் காவலர்கள் பேசியுள்ளனர். இதை கவனித்த சக ஊழியர்கள் இப்படி பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
அவ்வளவுதான் உடனே காவலர்களுக்கு கோபம் வந்துவிடவே வாக்குவாதம் பெரியதாக வெடித்திருக்கிறது. பணியிலிருந்த ஓட்டல் ஊழியர்களை தரகுறைவாக பேசி, பக்கத்து டேபிளில் சாப்பிட உட்கார்ந்த வாடிக்கையாளர்களுக்கும் தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள். 30 நிமிடங்களுக்கு பின்னர் அங்கிருந்து காவலர்கள் சென்றுவிட்டனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓட்டல் உரிமையாளர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதேபோல சிசிடிவி காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பரவியது.

அதேபோல வேங்கைவயல் சம்பவத்திலும் காவல்துறையினர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. புதுக்கோட்டையின் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கிராமத்தில் சிலருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல குழந்தைகளுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் குடிநீரிலிருந்துதான் தொற்று பரவியதாக கூறியுள்ளனர். இதனையடுத்து இளைஞர்கள் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய மேலே சென்று பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது அந்த தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் முதலில் வழக்குப்பதிவு செய்ய மறுத்துள்ளனர். இதனையடுத்து அரசியல் கட்சியினர் இதனை கையில் எடுத்த நிலையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த சிலரையே குற்றவாளிகளாக ஒப்புக்கொள்ள காவல்துறையினர் வற்புறுத்தியதாக கிராமத்தினர் குற்றம்சாடினர். இது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாக மாற்றுவதை காவல்துறையினர் கைவிட வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.
இதற்கெல்லாம் உச்சமாக நடந்த சம்பவம்தான் பல்வீர் சிங் வழக்கு. விசாரணைக்காக அழைத்து வந்து எங்களின் பற்களை கட்டிங் பிளேடு கொண்டு பிடுங்கியதாக அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது விசாரணை கைதிகள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் இது குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
அதாவது, "காவல்துறையினர் தவறுகளை திருத்திக்கொள்ளும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். காவல்துறை செயல்பாட்டில் குறையே கிடையாது என்று சொல்லமாட்டேன். அதேபோல அவர்கள் குற்றங்களை கண்டும் காணாமல் இல்லை. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை காப்பாற்ற மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications