"முடிஞ்சா சீக்கிரமே வீட்டிற்கு கிளம்பிடுங்க".. தமிழ்நாடு வெதர்மேன் தந்த அட்வைஸ்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை - கடலூர் பெல்ட்டில் நாளை பிற்பகல் வரை தீவிர கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மழை காலம் என்பதால் மக்களுக்கு சில முக்கியமான அறிவுரைகளையும் அவர் வழங்கி உள்ளார்.

Recommended Video

    சென்னையில் விரைவில் மழை தொடங்கும்.. Tamilnadu Weatherman தகவல்

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. ஆழ்ந்த தாழ்வு பகுதியாக இது வலுப்பெற்றுள்ள நிலையில் தமிழ்நாடு முழுக்க மழை தீவிரம் அடைந்துள்ளது.

    இன்று இரவிற்குள் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். வட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இதனால் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

    வெதர்மேன்

    வெதர்மேன்

    இந்த நிலையில் தமிழ்நாடு மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள ட்வீட்டில், மேகங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் கடலூர் - சென்னை - ஸ்ரீஹரிகோட்டா பெல்ட்டில் நாளை மதியம் வரை தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காரைக்கால் - நாகை பெல்டில் மேகங்கள் இல்லை.

    சென்னை பெல்ட்

    சென்னை பெல்ட்

    அந்த மேகங்கள் தற்போது நகர்ந்து கடலூர் - சென்னை பெல்டிற்கு சென்றுவிட்டது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் தூரமாகவே இருக்கிறது. ஆனால் இது நகர தொடங்கிய பின் மேக கூட்டங்கள் கடலூர் - சென்னை - ஸ்ரீஹரிகோட்டா பெல்ட் பக்கம் வந்துவிடும். கீழே இருக்கும் புகைப்படங்கள் உங்களுக்கு அனைத்தையும் விளக்கும்.

    சென்னை

    சென்னை

    சென்னையில் விரைவில் மழை தொடங்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் ஒரு பகுதி மேகம் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் இசிஆர், சிறுசேரி பகுதிகளில் முதலில் மழை தொடங்கும். அதன்பின் நகரின் மற்ற பகுதிகளில் மழை பெய்யும். அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் முடிந்த அளவு வீட்டிற்கு சீக்கிரம் செல்லுங்கள்.

    சீக்கிரம் செல்லுங்கள்

    சீக்கிரம் செல்லுங்கள்

    இது வெறும் விழிப்புணர்வு போஸ்ட்தான். அதிகாரப்பூர்வ வானிலை மைய தகவலையும், அரசின் அறிவிப்புகளையும் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள். இன்றும், நாளையும் உங்கள் போன், லேப்டாப் ஆகியற்றவை முழு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவுரை வழங்கி உள்ளார்.

    பிரதீப் ஜான்

    பிரதீப் ஜான்

    காற்றழுத்த தாழ்வு நிலை தமிழ்நாடு வடகடலோர மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் சென்னையில் இன்றில் இருந்து நாளை மதியம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழ்நாடு வெதர்மேன் இந்த அறிவுரையை வழங்கி உள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+