உடனே திரும்பி போங்க.. மழைக்கு இடையே எச்சரிக்கை விடுத்த கடலோர காவல்படை.. நடுக்கடலில் நடந்த சம்பவம்!
சென்னை: நேற்று மாலை மழைக்கு இடையே கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு கடலோர காவல்படையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வந்த நிலையில், 2 நாட்களாக மழை தீவிரம் அடைந்துள்ளது. மழையை தொடர்ந்து கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடல்
வங்கக்கடலில் தற்போது காற்றுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. நாளை பெரும்பாலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாழ்வு பகுதி புயலாக மாறும் வாய்ப்புகளும் உள்ளன. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின் தமிழ்நாடு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடல்
இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்படும். அதேபோல் அடுத்த சில நாட்களுக்கு கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் காற்று காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீறி சென்றனர்
ஆனால் எச்சரிக்கையை மீறி பல மீனவர்கள் சென்னை கடல் பகுதியிலு, கடலூர், நாகை கடல் பகுதிகளிலும் மீன் பிடிக்க சென்றுள்ளனர். நேற்று மழைக்கு இடையிலும் மீனவர்கள் பலர் தடையை மீறி மீன் பிடிக்க சென்றனர். இதையடுத்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் உடனடியாக ரோந்து பணிகளை மேற்கொள்ள தொடங்கினர். மீனவர்கள் எச்சரிக்கையை மீறி மீன் பிடிக்கிறார்களா என்று சோதனை செய்தனர்.
Recommended Video

எச்சரிக்கை
இந்த நிலையில் சென்னை கடல் பகுதிகளில் மழைக்கு இடையே மீன் பிடித்த மீனவர்களை திரும்பி செல்லுமாறு கடலோர காவல்படையினர் எச்சரிக்கை விடுத்தனர். ஒலிபெருக்கிகள் உதவியோடு கடலோர காவல்படையினர் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.. மழை பெய்து வருகிறது. கடலோர கொந்தளிப்பாக இருக்கிறது. இப்போது மீன் பிடிப்பது ஆபத்து.

காற்று
காற்றும் அதிகமாக வீசுகிறது. உடனே மீனவர்கள் எல்லோரும் திரும்பி செல்ல வேண்டும். அறிவிப்பு வரும்வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம். மீன் பிடிப்பது இப்போது ஆபத்து என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடல் பகுதிகளில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்கள் கரைக்கு திரும்பி சென்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications