தொடர் மழை எதிரொலி.. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை : தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரமாக தீவிர மழை பெய்து வருகிறது. முக்கியமாக கடந்த 48 மணி நேரமாக அதி தீவிர கனமழை பெய்து கொண்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நவம்பர் 11ம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அறிவிப்பு
வங்கக்கடலில் தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு போக இன்னொரு தாழ்வு பகுதி நாளை அல்லது நாளை மறுநாள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தீவிர கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
தமிழ்நாட்டில் நேற்று முதல் நாள் மாலையில் இருந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் சென்றுள்ளது. அதேபோல் டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்து வருகிறது.

தீவிர கனமழை
மயிலாடுதுறை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இன்றும் பெய்யும்
இந்த மாவட்டங்களில் இன்றும் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது . இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பத்தூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூர், நாமக்கல், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications