சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. முழு பின்னணி!
சென்னை: தமிழ்நாட்டில் கனமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் மீண்டும் மழை தீவிரம் எடுத்து உள்ளது. நேற்று இரவு கொஞ்சம் பிரேக் எடுத்த மழை மீண்டும் தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின் தமிழ்நாடு நோக்கி நகர உள்ளது.
இதனால் இனி வரும் நாட்களில் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளம்
தொடர் மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. பல இடங்களில் சென்னையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. 2015க்கு பின் சென்னையில் மீண்டும் 205 மிமீக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. சென்னை தவிர்த்து மற்ற சில மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

டெல்டா
டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் பல இடங்களில் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இன்றும் தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மழை
ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட இந்த 14 மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள மக்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். சென்னைக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை
தஞ்சாவூர், திருவாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று நாள் முழுக்க திருச்சியில் கனமழை பெய்தது. இந்த நிலையில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் திருச்சி உள்ளிட்ட இந்த 7 மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications