ஒருநாளில் முடியாது.. 2017 நியாபகம் இருக்கா? வங்கக்கடல் தாழ்வு பகுதி.. வெதர்மேன் முக்கிய வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் உருவாக உள்ள புதிய தாழ்வு நிலை காரணமாக எப்படி மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமாக ட்வீட் செய்துள்ளார்..

Recommended Video

    2017 நியாபகம் இருக்கா? புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து Tamilnadu Weatherman எச்சரிக்கை

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இரவுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகரும். இதனால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இலங்கை மற்றும் தென் தமிழகம் ஒட்டி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

    தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்

    தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்

    இந்த நிலையில் புதிய தாழ்வு நிலை காரணமாக எப்படி மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமாக ட்வீட் செய்துள்ளார். அதில், இந்த வடகிழக்கு பருவ மழை சீசனில் இதற்கு முன் பெய்த மழை போல இந்த மழை இருக்காது. சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் இந்த மழை ஒருநாள் மட்டும் பெய்துவிட்டு பின் விட்டுவிடாது.

    ஒருநாள் மழை இல்லை

    ஒருநாள் மழை இல்லை

    இது ஒருநாள் மழையாக இருக்க போவது இல்லை. மாறாக மழை பிரேக் எடுத்து பிரேக் எடுத்து 4 -5 நாட்களுக்கு பெய்ய போகிறது. 2017ல் நவம்பர் முதல் வாரம் மழை பெய்தது நியாபகம் இருக்கிறதா? அதுபோல தமிழ்நாட்டில் மழை பெய்ய போகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதில் கீழே ரிப்ளே ஒன்றில் இந்த சீசனில் சிறப்பான மழையாக இது இருக்க போகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

     2017 நவம்பர்

    2017 நவம்பர்

    2017 நவம்பர் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் மிக தீவிரமாக கனமழை பெய்தது. சென்னையில் பல இடங்களில் 10 செமீ முதல் 30 செமீ மழை மிக கனமழை பெய்தது. சென்னையில் அதிலும் டிஜிபி அலுவலகம் அருகிலும் மெரினாவில் 2017 நவம்பர் முதல் வாரம் ஒருநாள் திடீரென 30 செமீ மழை பெய்தது. சீர்காழி, சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்தது.

    எங்கு பெய்யும்?

    எங்கு பெய்யும்?

    இந்த நிலையில்தான் 2017 நவம்பரில் மழை பெய்தது போல தமிழ்நாட்டில் இந்த முறை மழை பெய்யும் என்று வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். முந்தைய ட்வீட்டில் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு இது சிறப்பான நாள். காற்றழுத்த தாழ்வு பகுதியின் ஒரு பகுதி காற்று தென் மாவட்டங்களில் வீசி வருகிறது. ராமந்தபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் பிற தென் கேரளப் பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+