தமிழ்நாட்டில் 200ஐ தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு! இன்று மட்டும் 242 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் மட்டும் 242 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 198 ஆக பதிவாகி இருந்தது. சென்னையில் அதிகபட்சமாக 63 பேருக்கும் செங்கல்பட்டில் 25 பேருக்கும் கோவையில் 16 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. தமிழ்நாட்டில் நேற்று 3558 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 105 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1086. தமிழ்நாட்டில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38,050.

தமிழ்நாட்டில் மொத்தம் 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. 8 மாவட்டங்களில் கொரோனாவால் எந்த பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களில் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்த போதும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அரசு தரப்பில் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் 200ஐ கடந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 242 ஆக பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 82 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 26; கோவையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 3595 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் இருந்து 112 பேர் சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1216. தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,050.

மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு:
- அரியலூர் 3
- செங்கல்பட்டு 26
- சென்னை 82
- கோவை 12
- கடலூர் 8
- தருமபுரி- 1
- திண்டுக்கல் -1
- ஈரோடு-- 2
- காஞ்சிபுரம்-5
- கள்ளக்குறிச்சி 5
- கன்னியாகுமரி 26
- கரூர்-1
- கிருஷ்ணகிரி-2
- மயிலாடுதுறை-1
- நாகை-3
- நாமக்கல்-3
- நீலகிரி-2
- ராமநாதபுரம்-1
- ராணிப்பேட்டை- 8
- சிவகங்கை 6
- தென்காசி- 2
- தஞ்சாவூர்-2
- திருப்பத்தூர்-1
- திருவள்ளூர் 13
- திருவண்ணாமலை-2
- திருவாரூர் -1
- தூத்துக்குடி-1
- திருநெல்வேலி- 2
- திருப்பூர்- 3
- திருச்சி -3
- வேலூர் - 1
- விழுப்புரம்- 1
- விருதுநகர்- 3
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications