சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போச்சே, போச்சே.. கைக்கு வந்த 3,676.55 கோடி ரூபாய் பணத்தை திருப்பியனுப்பிய தமிழக அரசு

Google Oneindia Tamil News

Recommended Video

    கைக்கு வந்த பெரும் நிதியை திருப்பி அனுப்பிய தமிழக அரசு - வீடியோ

    சென்னை: ஒரு பக்கம் மக்கள் கையில் பணப் புழக்கம் இல்லை, மறுபக்கம், இப்படி ஒரு செயலை செய்துள்ளது தமிழக அரசு. ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தம் ரூ.3,676.55 கோடி பணத்தை, சொளையாக, மத்திய அரசிடம் திருப்பிக் கொடுத்துள்ளது.

    சமீபத்தில் வெளியான மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையில்தான் இந்த திடுக்கிடும் தகவல் அம்பலமாகியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், மத்திய அரசு, தமிழக வரிப் பங்கை சரியாக தரவில்லை என்று மறுபக்கம் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுவதுதான்.

    எப்படி இப்படியான ஒரு சூழ்நிலை எழுந்தது என்று அறிய வேண்டுமானால், மத்திய அரசு ஒதுக்கிய நிதி மற்றும் தமிழக அரசு திருப்பியளித்தது எவ்வளவு என்பதை சுருக்கமாக பார்த்துவிடலாம் வாங்க.

    பல்வேறு திட்டங்கள்

    பல்வேறு திட்டங்கள்

    2017-18ம் நிதியாண்டில், மத்திய அரசு, தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கான நிதி உதவியாக ரூ.5,920.39 கோடியை, ஒதுக்கீடு செய்துள்ளது. இதில்தான், 3,676.55 கோடியை திருப்பிக் கொடுத்துள்ளது மாநில அரசு. வந்த பணத்தை ஏன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். இதற்கு காரணம், தமிழக அரசுதான் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

    இரு காரணங்கள்

    இரு காரணங்கள்

    இரு காரணங்கள்தான் இதற்கு அடிப்படை என்கிறார், தமிழகத்தை சேர்ந்த பிரபல நிதித் துறை வல்லுநர். "வீடு கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காகத்தான் மத்திய அரசு இந்த நிதியை ஒதுக்கீடு செய்தது. ஆனால் பலனாளிகளை கண்டுபிடிப்பதில் தமிழக அரசு தாமதம் செய்தது இதற்கான ஒரு காரணம். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், திட்டங்களை நிறைவேற்ற இயலாமை மற்றொரு காரணம்" என்று விளக்குகிறார் அவர்.

    சிஏஜி அறிக்கை

    சிஏஜி அறிக்கை

    எந்தெந்த துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை தமிழக அரசு திருப்பியனுப்பியது என்பது பற்றியும், சிஏஜி அறிக்கை விளக்கமாக தெரிவிக்கிறது. அதிகபட்சமாக, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டதில்தான், ரூ.2394 கோடியை திருப்பி கொடுத்துவிட்டதாம், தமிழக அரசு.

    பழங்குடியினர் நிதியும் பயன்படுத்தப்படவில்லை

    பழங்குடியினர் நிதியும் பயன்படுத்தப்படவில்லை

    கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்ட அடிப்படை மானியத் தொகையில் ரூ.758 கோடி, மத்திய அரசிடமே திருப்பியளிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் மேம்பாட்டுக்காக வந்த நிதி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி போன்றவற்றில் முறையே, ரூ.247.84 கோடி, ரூ.194.78 கோடி ஆகியவை மத்திய அரசிடமே திருப்பி வழங்கப்பட்டுள்ளன.

    English summary
    Tamilnadu government returns 3,600 crores of central aid fund, says CAG report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X