தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தொடங்கியது.. ஒரே நாளில் 20 லட்சம் பேர் இலக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு இந்த முகாம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் 3ஆவது அலையை வெல்ல தடுப்பூசி ஒன்றே முக்கிய ஆயுதம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். அதன்படி தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை இருந்த நிலையில் தற்போது மத்திய அரசிடம் இருந்து கணிசமான தடுப்பூசியை தமிழக அரசு வாங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இன்றைய தினம் மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்துகிறது.

நகராட்சி

நகராட்சி

இதற்கான ஏற்பாடுகளில் கடந்த சில தினங்களாக மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி, சுகாதாரத் துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு இந்த முகாம் தொடங்கியது.

இன்று தடுப்பூசி முகாம்

இன்று தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் 43,051 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் 20 லட்சம் தடுப்பூசிகளை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

3ஆவது அலையின் தாக்கம்

3ஆவது அலையின் தாக்கம்

கேரளாவில் 3ஆவது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் நிபா வைரஸ் வேறு மிரட்டி வருவதாலும் அந்த மாநிலத்தை ஒட்டிய கோவை, நீலகிரி, தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசிகளை அதிகரிக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பொது இடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றில் தடுப்பூசியை போட சென்னையில் 1600 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தொண்டு நிறுவனங்கள்

தொண்டு நிறுவனங்கள்

ரோட்டரி சங்கங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி துறையினர் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசிக்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோரில் 3 .48 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

ஒன்றரை லட்சம் பேருக்கு தடுப்பூசி

ஒன்றரை லட்சம் பேருக்கு தடுப்பூசி

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியில் மட்டும் 300, பிற இடங்களில் 166 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுளளன. இங்கு மட்டும் ஒன்றரை லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Recommended Video

    கொரோனா அச்சுறுத்தலால் களையிழந்து போன விநாயகர் சிலைகள் விற்பனை
    சேலம் மாவட்டம்

    சேலம் மாவட்டம்

    சேலத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமுக்காக வீடு வீடாக சென்று அதிகாரிகள் டோக்கன்களை வழங்கினர். சேலம் மாவட்டத்தில் மட்டும் 1,356 இடங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த முகாமை பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு கொரோனா சங்கிலியை உடைத்தெறிய வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+